Saturday, 8 September 2012

விருது பெரும் தோழர் த . சிவக்குமாருக்கு வாழ்த்துக்கள்


நமது சங்கத்தின் சட்ட ஆலோசகரும் , வழக்கறிஞருமான தோழர் த. சிவக்குமார் அவர்கள் மாணவர்களும் , சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் விதமாக 1 . தீங்கியல் சட்டம்  , 2 . சட்ட மொழி ,3 . வழக்கறிஞர் தொழில் நெறிமுறைகள் ,4 . இலவச சட்ட உதவி மற்றும் பொது நல வழக்காடுதல் , 5 . தொழிலாளர் மற்றும் தொழிற்சட்டங்கள், 6 . வரிவிதிப்பும் வரிச்சட்டங்களும்  ஆகிய நூல்களை தமிழில் எழுதியுள்ளார் . தொடர்ந்து நல்ல  தமிழில் சட்ட நூல்களை வெளியிட்டும்  வருகிறார். அவரது எழுத்து பணியினை பாராட்டி 'சட்ட கதிர் மாத இதழ்' இந்தாண்டிற்கான சிறந்த  தமிழ் சட்ட நூலுக்கான விருதினை அவருக்கு வழங்குகிறது. இந்த விருதினை 09 .09.2012 அன்று ராணி சீதை ஹாலில் 9.30 மணிக்கு உச்ச நீதிமன்ற , உயர்நீதிமன்ற மற்றும் மத்திய ,மாநில அமைச்சர்கள் பங்கு பெரும் நிகழ்ச்சியில் பெற இருக்கிறார். அவருக்கு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

Saturday, 1 September 2012

கொலைகார, குரோனி முதலாளித்துவ நிர்வாகங்களின் ஒருங்கிணைப்பாக விளங்கி 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் உழைக்கும் வர்க்கத்திற்கு விடுத்துள்ள சவாலை எதிர் கொள்வோம்


மாமேதை லெனின் ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலில் ஏகபோகங்கள் உருவாவதைப் பற்றி விரிவாக எழுதினார். குறிப்பாக டிரஸ்ட்கள் மற்றும் கார்டல்கள் என்ற ஏகபோக நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை விரிவாக விளக்கினார். எவ்வாறு ஒரே தொழிலைச் செய்யும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஏகபோகங்கள் உருவாயின என்பதை அந்நூலில் அவர் விளக்கினார்.

ஆனால் நவீன முதலாளித்துவம் அதனைத் தாண்டித் தற்போது பல மடங்கு சென்றுள்ளது. ஒரே தொழிலைச் செய்யும் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஏகபோகங்கள் உருவாகும் போக்கையெல்லாம்   தாண்டி லாபம் கிடைக்கும் அனைத்துத் தொழில்களிலும் சேவைகளிலும் மூலதன வலுக் கொண்ட நிறுவனங்கள் முதலீடு செய்து அத்தொழில்களை நடத்துகின்றன. இதில் குறிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியது ஒப்பந்தத் தொழிலிலும் பெரும் பெரும் ஒப்பந்தத் தொழிலாளர் நிறுவனங்களை ஏற்படுத்தி பல ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்கள் நுழைந்துள்ளன.

Saturday, 28 July 2012

தேனி மாவட்டத்தில் ஜே.டி. ஆய்வு! ஓடுவதற்கு தகுதி இல்லாத கம்பம் வண்டியை சரிசெய்ய உத்தரவு

தேனி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்(108AWU) சங்கம் சார்பாக ஆம்புலன்ஸ் வண்டிகள் சரிவர பரமரிக்கப்படுவதில்லை என்று மனு அளிக்கப்படிருந்தது. அதனை அடுத்து ஜே.டி. நேரில் ஆய்வு மேற்கொண்டார், அப்போது 4 டயர்களும் தேய்ந்து போய் ஓடுவதற்கு தகுதியே இல்லாமல் இருந்த கம்பம் வண்டியை அந்த வண்டி சரிசெய்யும் வரை ஓட்டக்கூடாது என்று உத்தரவிட்டார். அதனை அடுத்து அந்த வண்டி நிர்வாகத்தால் சரி செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆம்புலன்சிற்கும் 30 லட்சம் வரை ஆண்டுக்கு பராமரிப்பு செலவு ஆகிறது என்று கணக்கு எழுதும் ஜி.வி.கே. ஆம்புலன்ஸ் வண்டிகளில் டயர்களைக் கூட மாற்றுவதில்லை என்பது தான் நடைமுறை உண்மை. இதை அரசின் கவனத்திற்கு அனைத்து வழிகளில் நமது சங்கம் கொண்டு சென்று தான் இருக்கிறது. 

Sunday, 22 July 2012

பணிநீக்கம் செய்யப்பட்ட பயிற்சி பெற்ற பணியாளர்களை திரும்பவும் வேலைக்கு எடுத்து கொள்ள வேண்டும்

108 ஆம்புலன்ஸ் திட்டம் தற்போது விரிவு படுத்தப்பட்டு அரசு மருத்துவ மனைகளில் உள்ள இலவச ஆம்புலன்ஸ் களும் இந்த திட்டத்தில் தற்போது இணைக்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் மொத்தம் 450 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. புதிதாக 150 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. அந்த வண்டிகளை இயக்க ஆள்கள் தெரிவு நடைபெற்று வருகிறது. பணியாளர்களுக்கு 12 மணி நேர வேலை குறைவான சம்பளம் என்று இருப்பதால் இந்த பணிக்கு சேர யாரும் ஆர்வம் காட்டவில்லை. 

Saturday, 21 July 2012

சம்பளம் குறைவாக இருப்பதால் ‘108’ ஓட்ட டிரைவர் கிடைக்கவில்லை - தினகரன் நாளிதழ்


போதிய ஆட்கள் கிடைக்காததால் ‘108’ சேவைக்கு கூடுதலாக வாங்கப்பட்டுள்ள புதிய வாகனங்களை இணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு அவசர மருத்துவ உதவிகளை அளிக்கும் வகை யில் 108 சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவை யில் தமிழகத்தில் மொத்தம் 470 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. தமிழக அரசும், ஜி.வி.கே இஎம்ஆர்ஐ நிறுவனமும் இணைந்து இந்த சேவையை அளித்து வருகின்றன. இதை விரிவுபடுத்தும் வகையில் புதிதாக 150 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றை 108 சேவையில் இணைக்கும் நிகழ்ச்சி 19ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் விழா திடீரென ரத்து செய்யப்பட்டது.

Friday, 20 July 2012

இழப்பீடு வழங்க கோரி மதுரை ஆட்சியரிடம் கோரிக்கை

மதுரை ஆட்சியரிடம் வாகனங்கள் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை என்று வைத்த கோரிக்கையை அடுத்து அனைத்து வாகங்களிலும் என்னென்ன பழுது உள்ளது என்று அறிய ஒரு கமிட்டி போட்டு ஆய்வு செய்து அவ்வாறு உள்ள குறைபாடுகளை இருபது நாள்களுக்குள் நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ஆனால் ஜி.வி.கே. நிர்வாகம் இந்த பழுதுகளை நீக்க இன்று வரை ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆட்சியரின் உத்தரவை காற்றில் பறக்க விட்டது. கொட்டாம்பட்டி 108 ஆம்புலன்ஸ் விபத்திற்கு பிரேக் சரிவர இல்லாததே காரணம் என்று சொல்லப்படுகிறது. 

குவியும் குற்றச்சாட்டு ... குளறுபடியில் 108 !

அவசர காலத்தில் உயிரைக் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையே கொஞ்சம் கொஞ்சமாக மரணப் படுக்கைக்குப் போகும் நிலையை என்னவென்று சொல்வது ? என்ன பிரச்னை?


ரூ.10 ௦ லட்சம் இழப்பீடு தரவேண்டும்

விபத்தில் இறந்து போன மதுரை இ.எம்.டி. சரவணன் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.10 லட்சத்தை ஜி.வி.கே. நிர்வாகம் உடனடியாக தர வேண்டும். திரு.சரவனணன் அவர்கள் இந்த பணியை சேவை நோக்கத்தோடோ செய்து வந்தார். அவரின் இழப்பு என்பது பணத்தால் ஈடு செய்ய கூடியது அல்ல . இருந்த போதும் அவரின் குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு ஜி.வி.கே. நிர்வாகம் உடனடியாக இந்த  இழப்பீட்டுத் தொகையை கொடுக்க வேண்டும்.இதற்காக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூடாது. 

Wednesday, 18 July 2012

மதுரை சரவணன் இ.எம்.டி. விபத்தால் மரணம் அடைந்தார்.

108 ஆம்புலன்சில்  மதுரை கொட்டாம்பட்டி லோக்கேசனில் இ.எம்.டி.யாக வேலை பார்த்து வந்த திரு. சரவனணன் அவர்கள் இன்று அதிகாலை (19 . 07 . 2012 )  4 . 30 மணிக்கு பணி நிமித்தமாக  108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே கவனக்குறைவாக  வந்த லாரி மோதி அகால மரணம் அடைந்தார். திறமையான பணியாளரான திரு . சரவனணன் அவர்களுக்கு திருமணம் முடிந்து குழந்தை உள்ளது.  அவரது குடும்பத்தினர் மேலூரில் வசிக்கின்றனர். சரவனணன் குடும்பத்தினரும், தமிழகம் முழுவதும் உள்ள 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களும் அவரது இழப்பால் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் ( ஜி.வி.கே.) உடனடியாக தலையிட்டு அவரது குடும்பத்திற்கு தக்க இழப்பீடு வழங்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை அவரது இழப்பால் வாட்டும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறது. 

Friday, 13 July 2012

குவியும் குற்றச்சாட்டு குளறுபடியில் 108 - குமுதம் ரிப்போர்ட்டர்

அவசர காலத்தில் உயிரைக் காக்கும் '108 ' ஆம்புலன்ஸ் சேவையே கொஞ்சம் கொஞ்சமாக மரணப் படுக்கைக்குப் போகும் நிலையை என்னவென்று சொல்வது ?
 மேலும் படிக்க

Friday, 8 June 2012

20 நாள்களுக்குள் 108 ஆம்புலன்சில் உள்ள பழுதுகளை நீக்க மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு


108 ஆம்புலன்ஸ் வண்டியில் பராமரிக்கவேண்டிய அத்தியாவசியமான உயிர் காக்கும் உபகரணங்கள்  உட்பட வண்டிக்கு ஏற்படும் கோளாறுகளைச் சரிசெய்யும்படி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பலமுறை கோரிக்கைகள் வைத்தபோதும் போதும் ஜி.வி.கே.நிர்வாகம் எதையும் முழுவதுமாக சரிசெய்து தருவதில்லை. அதனால் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு ஆம்புலன்சில் உள்ள குறைகளை கோரிக்கை மனுவாக 30 . 05 . 2012 அன்று அளித்தோம்.மனுவை ஏற்றுக்கொண்ட  மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி  ஒவ்வொரு ஆம்புலன்சில் உள்ள குறைகளை அறிய தனி கமிட்டி   போடப்பட்டு ஒவ்வொரு ஆம்புலன்சாக சென்று அந்த கமிட்டி ஆம்புலன்சில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்தது.

Tuesday, 5 June 2012

‘108' ambulance employees stage stir on 30.05.2012- the Hindu


AGITATION:‘108' ambulance staff staging a demonstration in Madurai.— Photo: S. James.
The members of 108 Ambulance Thozhilalar Sangam staged a demonstration near Collector's office here on Wednesday.
The agitators demanded enhancement of basic infrastructural facilities in the vehicles and also ensure welfare of all the staffs – particularly, those handling the emergency vehicles round-the-clock.
There were aplenty of anomaly in pay structure, they claimed and hence demanded uniform scale.

Saturday, 2 June 2012

மதுரையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஜி.வி.கே வின் அடக்குமுறைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்


108 ஆம்புலன்ஸ் திட்டம் முழுக்க முழுக்க அரசின் நிதியுதவியுடன் நடைபெறுகிறது, ஆம்புலன்ஸ் வாங்குவது, ஊழியர்களின் சம்பளம், வண்டிக்கு ஆகும் பிற செலவுகள் அனைத்துமே அரசே வழங்குகிறது. ஜி.வி.கே. நிறுவனம் வெறுமனமே அரசின் பணத்தை பெற்று அதை நிர்வாகம் செய்யும் பணியை மட்டும் செய்கிறது. இவ்வாறு செயல்படும் இந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு அரசு தரும் சம்பளத்தை விட குறைவான சம்பளத்தையே ஊழியர்களுக்கு வழங்கிவருகிறது ஜி.வி.கே.நிர்வாகம் . 

Tuesday, 15 May 2012

Life savings Equipment in 108ambulances Dead : The New Indian ExpressOxygen cylinders, pulse  oximeters not working , allege workers members of the 108 ambulance workers union allege that the ambulances and the emergency equipment provided in them are not being maintained properly by the local administration of the GVK Emergency Management and Research Institute (EMRI).

Monday, 30 April 2012

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு மே தின ( தொழிலாளர் தின ) நல் வாழ்த்துக்கள்


தொழிலாளர் தினம் என்பது பல்வேறு அரசு விடுமுறைகளைப் போலவே வரக்கூடிய ஒரு விடுமுறை தினம் மட்டுமல்ல. தொழிலாளர் தினம் உலகம் முழுவதுமுள்ள தொழிலாளர்களால் மே முதல் நாள் அன்று அனுசரிக்கப்படுவது ஆகும். முதன் முதலாக சிகாகோ நகரில் உள்ள தொழிலாளர்களால் 8 மணி நேரம் வேலை , 8 மணி நேரம் ஓய்வு , 8 மணி நேரம் சமுதாயப்பணி என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. அவ்வாறு கோரி போராடிய தொழிலாளர்கள் ரத்தத்தால்  மூழ்கடிக்கப்பட்டார்கள்.

Wednesday, 18 April 2012

உயர்நீதிமன்ற உத்தரவால் பால் ராபின்சன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பணி புரிந்து வந்த பெண் இ.எம்.டி.யிடம் முறைகேடாக நடந்து கொண்ட ராமநாதபுரம் மாவட்ட மேலாளர் பால் ராபின்சன் மீது திருவாடனை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஜி.வி.கே. நிர்வாகம் தந்த அழுத்தம் காரணமாக வழக்கு பதிவு செய்வதில்  காவல் துறை மெத்தனமாக இருந்தது. 

Tuesday, 3 April 2012

"பீப்பிங் டாம்" பால் ராபின்சன்: பெண் இ.எம்.டி களிடம் அத்துமீறும் அதிகாரிகளுக்கு ஆதரவாக 108 ஆம்புலன்ஸ் ஜி.வி.கே. நிர்வாகம்


திண்டுக்கல் மாவட்டத்தில் இரவுப் பணியில் இருந்த பெண் இ.எம்.டி.யிடம் கடந்த வருடத்தில் அந்த மாவட்ட ஒ.இ. ஆக வேலை பார்க்கும் குமரன் பாலியல் ரீதியில் துன்புறுத்தி மானபங்கப் படுத்தினார். அந்த பெண் இ.எம்.டி. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் மாவட்ட ஒ.இ. மீது இந்திய தண்டனை சட்டம் 506 (2 ) உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அப்போது பல்வேறு பத்திரிக்கைகளில் அந்த செய்தியும் வந்துள்ளது. ஆனால் ஜி.வி.கே. நிர்வாகம் அவசர உதவி பணிகளில் சேவை நோக்கத்தோடு பணிபுரியும் பெண் இ.எம்.டி.யிடம் தவறாக நடக்க முயன்ற ஒ.இ.குமரன் மீது நடவடிக்கை எடுக்காமல் அந்த பெண் இ.எம்.டி. யை எந்தவித விசாரணையும் செய்யாமல் பணிநீக்கம் செய்துவிட்டது. ஜி.வி.கே. நிர்வாகத்தின் ஆணாதிக்கத் திமிர் எந்த அளவிற்கு என்றால் அந்த பெண் இ.எம்.டி. க்கு அளித்த பணிநீக்க உத்தரவில் " உயர் அதிகாரி மீது நீங்கள் புகார் அளித்ததால் பணிநீக்கம் செய்யப்படுவதாக வெளிப்படையாகவே  உத்தரவிட்டுள்ளனர். இப்போது அந்தக் காமக் கொடூரன் குமரன் உயர் அதிகாரியாக ஜி.வி.கே. நிர்வாகத்தில் இருக்கிறார். ஆனால் அவரால் பாதிக்கப் பட்ட அந்த அப்பாவி பெண் இ.எம்.டி. வேலையும் இழந்து வெளியில் இருக்கிறார். ஆனால் குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத்தந்தே தீருவேன் என்ற மன உறுதியுடன் அந்த குற்ற வழக்கை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

Thursday, 15 March 2012

பணி மூப்பு அடிப்படையில் சம்பள உயர்வு வழங்க வேண்டும்


இதுவரை வருடாந்திர சம்பள உயர்வு வழங்கும்; போது சிலருக்கு கூடுதலாகவும் சிலருக்கு குறைவாகவும் உயர்த்தப்படுகிறது வழக்கமாக இருந்து வருகிறது. பல சமயங்களில் சமீபத்தில் வேலைக்குச் சேர்ந்தவருக்கு கூடுதலாகவும் பணி மூப்பு உள்ளவருக்கு குறைவாகவும் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. காரணம் கேட்ட போது வேலைச் செயல்பாட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் (Performance) சம்பள உயர்வு வழங்கப்படுவதால் இவ்வேறுபாடு இருக்கத்தான் செய்யும் என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆனால் தங்களின் வேலைச் செயல்பாடு எவ்வாறு மதிப்பிடப்படுகிறது, என்றோ  ஏன் குறைவாக சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்றோ  அவரின்  எந்தச் செயல்பாடு குறைபாடுடையது. அவற்றைப் போக்க அவர் என்ன செய்ய வேண்டும் என்றோ, எந்த ஊழியருக்கும் வெளிப்படையாகச் சொல்லப்படுவதில்லை.

Friday, 9 March 2012

முதல்வரிடம் 108 ஆம்புலன்ஸ் சங்கம் சார்ப்பாக கோரிக்கை மனு அளிப்புஅனுப்புநர்

            “108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு”
            கதவு எண்.21, நேதாஷி மெயின் ரோடு, முல்லை நகர்,
            மதுரை – 625002.

பெறுநர்

1.         உயர்திரு. சீப் ஆப்ரேடிங் ஆபிசர் (COO) அவர்கள்
G.V.K.இஎம்ஆர் ஐ 108 ஆம்புலன்ஸ் சேவை.

2.         உயர்திரு. திட்ட இயக்குனர் அவர்கள்,
சென்னை.

           
            பொருள் :       இஎம்டி , கால் சென்டர் ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளத்துடன்
பஞ்சப்படியும் சேர்த்து வழங்கவும் - சம்பள உயர்வும் உயர்த்தப்படும் சம்பளம் பணிமூப்பின் அடிப்படையில் உயர்த்தபடவும் - பேருந்து கட்டணத்திற்கு பஸ்பாஸ் வழங்கவும் - கோருதல் சம்பந்தமாக.

Thursday, 5 January 2012

தமிழக முதல்வரின் உத்தரவை ஏற்க மறுக்கும் ஜி.வி.கே.


வேலை பார்க்கும் மகளிருக்கு பேறுகால விடுப்பு மூன்று மாதத்தில் இருந்து ஆறுமாதமாக உயர்த்தும்படி மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் இந்த உத்தரவு அனைத்து அலுவலங்களிலும் நடை முறைப்படுத்தப்படுகிறது.  ஆனால் அரசியலமைப்பு சட்டத்தையே மதிக்காமல் லாபவெறி கொண்டு தொழிலாளர்களை சித்தரவதை செய்வதே தொழிலாக கொண்டு செயல்பட்டு வரும் ஜி.வி.கே நிறுவனம் முதல்வரின் இந்த உத்தரவை செயல்படுத்த மறுத்து வருகிறது.

Wednesday, 4 January 2012

தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு போனஸ் வழங்க வேண்டும்


அரசு, மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பொங்கலுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. உயிர்காக்கும் பணியில் கண் அயராது பணிசெய்யும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு (பைலட் ,இ.எம்.டி, மற்றும் கால்  சென்டர் ஊழியர்கள்)  குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது.  தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை 108   ஆம்புலன்ஸ் ஊழியர்களும் சிறப்பாக கொண்டாட அவர்களுக்கு உரிய போனஸ் வழங்க வேண்டும்.