Friday, 19 August 2011

EMRI 108 ambulance drivers observe fast - the hindu


Drivers of the 108 ambulance service by the GVK Emergency Management and Research Institute observed a fast in front of the Gandhipuram Central bus stand on Thursday seeking that their demands for ensuring better working conditions be conceded.
In the event of their struggle not yielding results, the drivers and paramedical staff have planned to mobilise the ambulance drivers of EMRI 108 across the State and resort to a relay fast.
The drivers had already petitioned the District Collector on July 11 and had on July 13 held talks for resolving the demands and issues placed by them. 

Thursday, 18 August 2011

கோவையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் உண்ணாவிரதம்


18 .08 .2011 அன்று கோவை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்ப்பாக 108  ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்க கோரி அடையாள உண்ணாவிரத்தை காலை 10  மணி முதல் , மாலை 5  மணி வரை மேற்கொண்டார்கள் . இந்த உண்ணாவிரதத்தில்  பெருந்திரளாக 108 AWU  தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள். உண்ணாவிரதம் நேர்த்தியோடும் ,ஒழுங்கோடும் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் 13 பேர் தற்காலிக பணி நீக்கம்

ஜி.வி.கே. நிர்வாகம் அடாவடிக்கு பேர்போனது ,சட்டத்தை மதிக்காதது என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில்   கன்னியாகுமரியை  சேர்ந்த 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் 13  பேர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அத்தோடு தமிழக அரசிற்கு தொழிலார்களின் போராட்டங்களை தவறாக சித்தரித்துள்ளது. அவர்களின் பணிநீக்கதிற்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் அவர்களை திரும்பவும் பணிக்கு சேர்த்து கொள்ளும் வரையிலும்  போராடும். ஜி.வி.கே.நிர்வாகத்தின் இது போன்ற அடாவடிதனங்களை 108 AWU  வன்மையாக கண்டிக்கிறது.

Monday, 8 August 2011

108 ambulance staff seek regularisation - The Hindu

Condition of many vehicles not up to the mark; vehicle maintenance should be improved
Employees affiliated to the 108 ambulance service association have urged the State Government to take over the company and thereby absorb them as government servants.
Staging a demonstration near the Collector's office here on Thursday, the members urged the government to intervene and regulate in their service matters.

Friday, 5 August 2011

கன்னியாகுமரி மாவட்ட ஊழியர்களிடம் அமைச்சர்கள் உறுதி

கன்னியாகுமரி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மாண்புமிகு , வனத்துறை அமைச்சர். கே.டி.பச்சைமால், ,மற்றும் மாண்புமிகு கதர் துறை அமைச்சர் .  செந்தூர் பாண்டியன் ஆகியோரிடம் 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க சட்டசபையில் வழியுறுத்த கோரி கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர் .அமைச்சர்களும் தொழிலார்களின் கோரிக்கையை மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு  கொண்டு செல்வதாக உறுதியளித்தார்கள் .

Thursday, 4 August 2011

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் : மதுரையில் மாநில அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்



108  ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்று நடத்துதல் , அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் பெரும் விகிதத்தில் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்குதல், தன்னிச்சையாக வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளரைப் பணித்தொடர்ச்சியுடன் மீண்டும் வேலைக்கு எடுத்தல் , 8  மணி நேரத்திற்கு அதிகமாகச் செய்யும் வேலைக்கு ஓவர்டைம் வழங்குதல் , அரசு விடுமுறை நாட்களில் வேலை செய்பவர்களுக்கு இரட்டை சம்பளமோ அல்லது மாற்று விடுப்போ வழங்குதல் , வாகனத்தைத் தூய்மையாகவும் உரியமுறையிலும் பராமரிப்பதற்கும் , ஊழியர்கள் ஓய்வு நேரத்தில் தங்கவும் உரிய ஏற்பாடுகள் செய்யவும்  போன்ற கோரிக்கைகளை வழியுறுத்தி மாநில அளவிலான   108  ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்  மதுரை ஆட்சியர் அலுவலகம் எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 4 .8 .2011  காலை 10.30 அளவில் நடத்தியது , இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு பணிச் சுமைக்களுக்கு நடுவே 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  

Wednesday, 3 August 2011

சென்னை , திருவள்ளூரில் தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் டி.எம்., மற்றும் ஒ.இ.


நமது தமிழக முதல்வர் அவர்கள் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட கடுமையாக போராடிவருகிறார்கள். சென்ற ஆட்சியில் நிலப்பறிப்பு,கொலை , ஆள்கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்ட தி.மு.க. ஆட்சியாளர்களை குற்ற வழக்குகள் பதிவு செய்து கைது செய்து வருகிறார்கள் . ரவுடிகள் இவ்வாறு ஒடுக்கப்படுவது பொது மக்கள் மத்தியில் முதல்வருக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. நமது முதல்வரின் கனவை நிறைவேற்றவே 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் வேலை செய்து வருகிறார்கள். 

Monday, 1 August 2011

ஜி.வி.கே., இஎம்அர்ஐ எந்த நாட்டு சட்டத்தின் கீழ் இயங்குகிறது


எந்த ஒரு நிறுவனமும் , ஏன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில, மத்திய அரசும் கூட  நமது இந்திய அரசியலைப்பு சட்டப்படியே இயங்க வேண்டும். அப்படி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்காத அரசை , நிறுவனத்தை மூடுவதற்கு உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு. ஸ்டெரிலைட், மற்றும் கர்நாடகாவில் இயங்கிய சட்ட விரோதமான கனிமவளங்களை எடுக்கும் நிறுவனங்களை நீதிமன்றங்கள் மூடும்படி உத்தரவிட்டது.