Monday, 30 April 2012

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு மே தின ( தொழிலாளர் தின ) நல் வாழ்த்துக்கள்


தொழிலாளர் தினம் என்பது பல்வேறு அரசு விடுமுறைகளைப் போலவே வரக்கூடிய ஒரு விடுமுறை தினம் மட்டுமல்ல. தொழிலாளர் தினம் உலகம் முழுவதுமுள்ள தொழிலாளர்களால் மே முதல் நாள் அன்று அனுசரிக்கப்படுவது ஆகும். முதன் முதலாக சிகாகோ நகரில் உள்ள தொழிலாளர்களால் 8 மணி நேரம் வேலை , 8 மணி நேரம் ஓய்வு , 8 மணி நேரம் சமுதாயப்பணி என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. அவ்வாறு கோரி போராடிய தொழிலாளர்கள் ரத்தத்தால்  மூழ்கடிக்கப்பட்டார்கள்.

Wednesday, 18 April 2012

உயர்நீதிமன்ற உத்தரவால் பால் ராபின்சன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.



ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பணி புரிந்து வந்த பெண் இ.எம்.டி.யிடம் முறைகேடாக நடந்து கொண்ட ராமநாதபுரம் மாவட்ட மேலாளர் பால் ராபின்சன் மீது திருவாடனை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஜி.வி.கே. நிர்வாகம் தந்த அழுத்தம் காரணமாக வழக்கு பதிவு செய்வதில்  காவல் துறை மெத்தனமாக இருந்தது. 

Tuesday, 3 April 2012

"பீப்பிங் டாம்" பால் ராபின்சன்: பெண் இ.எம்.டி களிடம் அத்துமீறும் அதிகாரிகளுக்கு ஆதரவாக 108 ஆம்புலன்ஸ் ஜி.வி.கே. நிர்வாகம்


திண்டுக்கல் மாவட்டத்தில் இரவுப் பணியில் இருந்த பெண் இ.எம்.டி.யிடம் கடந்த வருடத்தில் அந்த மாவட்ட ஒ.இ. ஆக வேலை பார்க்கும் குமரன் பாலியல் ரீதியில் துன்புறுத்தி மானபங்கப் படுத்தினார். அந்த பெண் இ.எம்.டி. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் மாவட்ட ஒ.இ. மீது இந்திய தண்டனை சட்டம் 506 (2 ) உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அப்போது பல்வேறு பத்திரிக்கைகளில் அந்த செய்தியும் வந்துள்ளது. ஆனால் ஜி.வி.கே. நிர்வாகம் அவசர உதவி பணிகளில் சேவை நோக்கத்தோடு பணிபுரியும் பெண் இ.எம்.டி.யிடம் தவறாக நடக்க முயன்ற ஒ.இ.குமரன் மீது நடவடிக்கை எடுக்காமல் அந்த பெண் இ.எம்.டி. யை எந்தவித விசாரணையும் செய்யாமல் பணிநீக்கம் செய்துவிட்டது. ஜி.வி.கே. நிர்வாகத்தின் ஆணாதிக்கத் திமிர் எந்த அளவிற்கு என்றால் அந்த பெண் இ.எம்.டி. க்கு அளித்த பணிநீக்க உத்தரவில் " உயர் அதிகாரி மீது நீங்கள் புகார் அளித்ததால் பணிநீக்கம் செய்யப்படுவதாக வெளிப்படையாகவே  உத்தரவிட்டுள்ளனர். இப்போது அந்தக் காமக் கொடூரன் குமரன் உயர் அதிகாரியாக ஜி.வி.கே. நிர்வாகத்தில் இருக்கிறார். ஆனால் அவரால் பாதிக்கப் பட்ட அந்த அப்பாவி பெண் இ.எம்.டி. வேலையும் இழந்து வெளியில் இருக்கிறார். ஆனால் குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத்தந்தே தீருவேன் என்ற மன உறுதியுடன் அந்த குற்ற வழக்கை தொடர்ந்து நடத்தி வருகிறார்.