கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ,108 அவசரகால ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஈரோட்டில் கடந்த 28.10.2013 அன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியன் டிரேடு யூனியன் மத்திய அமைப்பில் இணைந்த ,108 அவசரகால ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ,கோவை மண்டல அளவிலான உண்ணாவிரதபோரட்டம் நடந்தது.
ஈரோடு, சேலம்,நாமக்கல்,தருமபுரி,கிருஷ்ணகிரி,கோவை,ஊட்டி,திருப்பூர்,கரூர் மாவட்டங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் மற்றும் அவசர மருத்துவ உதவியாளர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட அமைப்பு செயலாளர் பால்கண்ணன் தலைமை வகித்தார்,ஈரோடு மாவட்ட செயலாளர் சிவகுமார் வரவேற்றார்,கோவை மண்டல செயலாளர் சுரேஷ்குமார் நன்றி உரையாற்றினர்.
வாகன பராமரிபின்மையால் ஏற்படும் விபத்து,108 உழியர்களின் உயிரிழப்புக்கு சட்ட உதவிகள்,இழப்பீடு,பணி பாதுகாப்பு மறிக்கப்படுகிறது.தொழிலாளர் நல சட்டப்படி வழங்கப்பட வேண்டிய குறைந்த பட்ச 12%போனஸ் கூட வழங்கப்படுவதில்லை.
8மணி நேரத்துக்கு மேல் பணியாற்றும் உழியர்களுக்கு ஓடி மற்றும் அதற்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை.
பணி மூப்பு அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்படுவதில்லை,அதற்க்கு மாறாக ரகசிய மதிப்பீட்டு முறை பின்பற்றப்படுகிறது.
முறையான இடமாறுதல் கொள்கை வகுக்கப்படவில்லை,சங்கத்தின் முன்னணி உழியர்களை பழிவாங்குவதர்க்காக மட்டுமே இடமாறுதல் செய்யப்படுகிறது.
இது தவிர 600க்கும் மேற்பட்ட பெண் உழியர்கள் பணிபுரியும் இடத்தில்,அடிப்படை வசதி கூட இல்லை.அரசு விடுமுறை நாட்களில் கூட விடுப்போ ,இதர நாட்களில் பணிபுரியும் போது இரட்டிப்பு சம்பளமோ வழங்குவதில்லை.இபிரச்சனைகளுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் நமது உண்ணாவிரதத்திற்கு அதரவு கொடுத்து ஒத்துழைத்து வெற்றிபெற செய்தனர். .