108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (இணைப்பு COITU ) பொது குழு கூட்டம் இன்று 06 .03 . 2013 மதுரை கே.புதூரில் மிகசிறப்பான முறையில் பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்போடு படு சிறப்பாக நடைபெற்றது. சங்கத்திற்கு புதிய தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். நிர்வாகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டார்கள் . தமிழக அரசே ஆம்புலன்ஸ் நிர்வாகத்தை ஏற்று நடத்த வேண்டும் என்ற தீர்மானம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.