Wednesday, 18 September 2013

சைரன் இல்லை, டயர் மோசம், ஏ.சி., பழுது கமுதி "108' ஆம்புலன்சில் தான் இத்தனையும்


கமுதியில் உள்ள, "108' ஆம்புலன்ஸில் சைரன் ஒலிக்கவில்லை. "மொசைக்' போல மழுங்கிய டயர்கள், "ஏ.சி.,' பழுதால் நோயாளிகள் மட்டுமின்றி, பணியாளர்களும் அவதிப்படுகின்றனர்.கமுதியை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, அவசர தேவைக்காக, "108' ஆம்புலன்ஸ் இயக்கப்படுகிறது. சமீபகாலமாக பராமரிப்பு இன்றி, மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. முக்கியமாக சைரன் இல்லை. சாலையில்வாகனங்கள் விலகி இடம்கொடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. டயர்களின் நிலைமையும் படுமோசமாக இருப்பதால், கிராமங்களுக்கு விரைந்து சென்று நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வருவதில், பணியாளர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

ஆம்புலன்சில் ஏ.சி., பழுதடைந்து பல மாதங்களாகியும், சரி செய்யப்படவில்லை. நோயாளிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்."108' திட்ட மேலாளர் ஒருவர் கூறுகையில், ""விரைவில் சரி செய்யப்படும்,'' என்றார்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=773783

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் கோரிக்கை : பேச்சு வார்த்தை 4ம் தேதி தள்ளிவைப்பு

அவசர கால, 108 ஆம்புலன்ஸ் சேவை தொழிலாளர்கள் கோரிக்கைக்கான பேச்சுவார்த்தை, அடுத்த மாதம், 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அவசரகால உதவிக்கான,"108' ஆம்புலன்ஸ் திட்டம், அமலில் உள்ளது. இதை, இ.எம்.ஆர். ஐ., என்ற நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும், 600க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில், 2,500 பேர் பணியாற்றுகின்றனர். 

Thursday, 12 September 2013

நிர்வாகத்தின் அலட்சியபோக்கினால் வேலைநிறுத்தத்தை நோக்கி பயணிக்கும் 108 தொழிலாளர்கள்

கடந்த 11/09/2013 அன்று சென்னை D.M.S அலுவலகத்தில் தொழிலாளர் துணை ஆணையர் முன்னிலையில் நமது 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்திற்கும் GVKemri நிறுவனத்துக்கும்  இடையிலான பேச்சுவர்த்தையில் நாம் நினைத்தது போலவே எந்த அதிகாரியும் கலந்துகொள்ளவில்லை அதற்கு மாறாக பாலமுருகன் என்பவரிடம் கடிதம் ஒன்றை கொடுத்தனுப்பி மேலும் ஒரு வாய்தா கேட்டனர்.

இதை கேட்ட தொழிலாளர் துணை ஆணையர் திரு பாஸ்கரன் அவர்கள் கோபமடைந்தார்.அவர்களின் கடிதத்தை வாங்க மறுத்ததோடு வன்மையாக கண்டிக்கவும் செய்தார்.தொலைதூரத்திலிருந்து வரும் தொழிலாளர்களை ஏன் இப்படி அலைக்கழிகிரீர்கள் என்று கூறி உடனே அவரை  வெளியேற்றினார்.
அதன் பின்னர் நமக்கு சில முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.பின்னர் பேச்சுவார்த்தை 18/09/2013 க்கு தள்ளிவைக்கப்பட்டது .

சட்ட ரீதியான அணுகுமுறைக்கு இவர்கள் இம்மியளவும் மதிப்பளிக்க தயாராக இல்லை  என்பது தெள்ளத்தெளிவானது.வேலைநிறுத்தம் செய்யாமல் அமைதியான முறையில் நமது கோரிக்கைகளை வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கைக்கு இவர்கள் முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.

மக்கள் ஆதரவுடன் சட்ட ரீதியான மாநிலம் தழுவிய வேலைநிருத்தத்தால் மட்டுமே நமது உரிமைகளை வென்றெடுத்தாகவேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் தோழர்களே ஒன்றுபடுவோம் நாம் ஒற்றுமையால் வெற்றியை நிலைநாட்டுவோம்.

 இன்னும் ஓரிரு தினங்களில் பிரச்சார குழு அமைத்து நமது நிலைமையை மக்களிடம் எடுத்து செல்லும் விதமாக துண்டு பிரசுரங்கள் மாநிலம் முழுமைக்கும் மாநில சங்கத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும். ஓய்வு நேரங்களில் நாம் அனைவரும்   மாநிலம் முழுமைக்கும் இதனை கொண்டு சேர்ப்போம்.

Monday, 2 September 2013

மாவட்ட அளவிலான வேலைநிறுத்த ஆயத்த கூட்டம் சேலம்

நமது 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட அளவிலான வேலைநிறுத்த ஆயத்த கூட்டம்    சேலத்தில் இன்று மிக சிறப்பாக நடைபெற்றது.

 கூட்டத்தில் மாவட்ட  நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.கோவை மண்டல செயலாளர் திரு சுரேஷ்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.

வரும் 11/09/2013 அன்று சென்னையில்  நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்திர்க்கு முழு ஒத்துழைப்பு தருவதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் சேலம் மாவட்டத்தில் ஓய்வில் உள்ள அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர்.