(108AWU)Reg.No.1508/MDU, Affiliated with: CENTRAL ORGANISATION OF INDIAN TRADE UNIONS- COITU
Sunday, 29 December 2013
நாமக்கல்லில் வெற்றிகரமாக நடைபெற்ற எழுச்சிமிகு தர்ணாப் போராட்டம்
நாமக்கல்லில் வெற்றிகரமாக நடைபெற்ற எழுச்சிமிகு தர்ணாப் போராட்டம்
கடந்த 27.12.2013 அன்று நாமக்கல்லில் நடைபெற்ற வேலைநிறுத்த ஆதரவு தர்ணாப் போராட்டத்தை நமது சங்கத்தின் மாநிலத்தலைவர் தோழர் வி.வரதராஜ் துவக்கிவைத்தார். மாநில அமைப்புச்செயலாளர் தோழர் பால்கண்ணன், மாநிலப் பொருளாளர் தோழர் சரவணன், கோவைமண்டலப் பொருப்பாளர் தோழர் சுரேஷ்குமார் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் பலரும் உரையாற்றினர். எழுச்சிமிகு முழக்கங்கள் முழக்கப்பட்டன.
போராட்டத்தில் கோவைமண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் பணியாற்றும் பைலட், இஎம்டிக்கள் 200 க்கும் மேற்பட்டோர் உணர்வுப்பூர்வமாகக் கலந்து கொண்டனர்.மண்டலத்தில் பணியில் இருப்பவர்களைத்தவிர ஓய்வில் இருப்பவர்கள் அனைவரும் தொலைவையும் பொருட்படுத்தாமல் மிகுந்த உணர்ச்சியுடன் கலந்து கொண்டு வீரமுழக்கமிட்டனர். அவர்களது முழக்கங்களில் இதுநாள் வரை தங்களை கட்டிப்போட்டிருந்த அடிமைச் சங்கிலியை உடைத்தெரிய வேண்டும் என்ற வீராவேசம் தெரிந்தது. முடிவில் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் த.சிவக்குமார் தர்ணாப் போராட்டத்தை முடித்து வைத்து உரையாற்றினார்.
Saturday, 28 December 2013
108 ஆம்புலன்ஸ் பைலட், இஎம்டி, கால்சென்டர் ஊழியர்களின் வேலைநிறுத்தக் கோரிக்கைகள்
கோரிக்கைகள் தொடர்பாக நமது மாநிலச் சங்கத்தின் சார்பாக தொழிலாளர் ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தொழிற்தாவாவின் நகல்:
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தம் அறிவிப்பு
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வருகின்ற 2014 ஜனவரி 8 ஆம் தேதி இரவு எட்டு மணி முதல் ஜனவரி 9 ஆம் தேதி இரவு எட்டு மணி வரை மாநிலம் தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தம் அறிவிப்பு
இது தொடர்பாக மாநிலச் சங்கம் கடந்த 24.12.2013 அன்று மதுரை செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்ட அறிக்கை
இது தொடர்பாக மாநிலச் சங்கம் கடந்த 24.12.2013 அன்று மதுரை செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்ட அறிக்கை
Saturday, 21 December 2013
DMS அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி
கடந்த 18.12.2013அன்று ,
சென்னை தேனாம்பேட்டை DMS அலுவலகத்தில் நடைபெற்ற மிகவும் எதிர்பர்கபட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
தொழிலாளர் துணை ஆணையர் பாஸ்கரன் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் HR இராமச்சந்திரன் கலந்து கொண்டு மேலும் ஒரு வாய்தா கேட்க சங்கநிர்வாகிகளும் உழியர்களும் கொதிதெழுந்தனர்.
தோழர்களே நமது நியாமான கோரிக்கைகளை பரிசீலிக்க கூட தயாராக இல்லாத இந்த ஜி.வி.கே நிறுவனத்தை எதித்து நமது உரிமைகளை மீட்டுக்க நேரடி நடவடிக்கைக்கு தயாராவோம்.
வாருங்கள் தோழர்களே ஒன்றுபடுவோம் ......
களம் காண்போம் .......
வென்றெடுப்போம்........

வேலைநிறுத்த ஆயத்த கூட்டம் நாமக்கல்லில்
கடந்த11.12.2013 அன்று,
நாமக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூட்டத்தில் வரும்18.12.2013 அன்று நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மாநில அளவிலான வேலைநிறுத்தத்திற்குமுழு அதரவு தருவதாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இ.எஸ்.ஐ முலமாக இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை செய்வது சம்பந்தமான விளக்கம் அளிக்க வாசன் கண் மருத்துவமனயிலிருந்து நிர்வாகிகளை வரவழைத்து உழியர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இறுதியாக கடந்த மாதம் நடந்த விபத்தை காரணம் காட்டி மாவட்ட துணை தலைவர் சத்தியமூர்த்திக்கு15 நாட்களாக பணி வழங்கப்படாமல் உதியத்தில் ரூபாய்5000 பிடிக்கப்பட்டது.அதனால் அவருக்கு மாவட்ட சங்கத்திலிருந்து உதவித்தொகையாக ரூபாய்5000 வழங்கப்பட்டது.

நாமக்கல்லில் கோரிக்கை மீதான விசாரணைக்கு HR இராமச்சந்திரன் வரவழைப்பு
நாமக்கல் துணை ஆணையர் அலுவலகத்தில் துணை ஆணையர் அஜய் யாதவ் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் ஜி.வி.கே நிறுவனத்தின் HR Team Leader இராமச்சந்திரன் கலந்துகொண்டார்.
நமது கோரிக்கைகளில் ஒன்றுக்கு கூட சரியான பதில் சொல்ல முடியாமல் திணறிய ராமச்சந்திரனுக்கு துணை ஆணையர்16.12.2013 க்குள் 8 மணி நேர பணி,போனஸ் உள்ளிட்ட8 கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உத்தரவு இட்டார்.
இதில் கோவை மண்டலத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் உழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு
கடந்த 30.10.2013 அன்று,
நாமக்கல் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் தட்சினமூர்த்தியிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.
தொழிலாளர் விரோதபோக்கிற்காக பொது சேவை பாதிக்கும் விதமாக தொடர்ச்சியாக நான்கு அம்புலன்சுகளை நிறுத்திய DM குமரன் மற்றும் EME உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுத்தினார்.

Thursday, 19 December 2013
பணி நேரத்தை மாற்றி அமைக்க எதிர்ப்பு
பணி நேரத்தை மாற்றி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் 108
அலுவலகதில் DM குமரனை உழியர்கள் முற்றுகையிட்டு ஞாயம் கேட்டனர் .
Subscribe to:
Posts (Atom)