12 மணி நேர பணிச்சுமை, பணியிட மாற்றம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறுகின்றனர்.தமிழ்நாடு அரசு மற்றும் ஜி.வி.கே. எமர்ஜென்ஸி மேனேஜ்மென்ட் அன்ட் ரிசர்ச் நிறுவனத்தின் கூட்டு முயற்சியுடன் 2008-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சுமார் 385 ஆம்புலன்ஸ்கள் செயல்படுகின்றன.ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு பைலட் (டிரைவர்) ஒருவரும், எமர்ஜென்ஸி மெடிக்கல் டெக்னீஷியன் ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். டிரைவர்களுக்கு | 6,500; எமர்ஜென்ஸி மெடிக்கல் டெக்னீஷியனுக்கு | 7,500 என்ற நிலையில் மாத ஊதியம் வழங்கப்படுகிறது.
(108AWU)Reg.No.1508/MDU, Affiliated with: CENTRAL ORGANISATION OF INDIAN TRADE UNIONS- COITU
Thursday, 8 September 2011
108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்தக் கோரி மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம்
108 ஆம்புலன்ஸ் மருத்துவ சேவைத் திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு பிரபலமான திட்டமாகும். கல்வி, பொதுமருத்துவம் போன்றவை ஒரு மக்கள் நல அரசின் அதிமுக்கிய பணிகளாகும். அதில் பொதுமருத்துவம் சார்ந்த இந்த ஆம்புலன்ஸ் சேவை அரசாங்கத்தால் நடத்தப்படுவதாகவே பெரும்பாலோர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த சேவை முழுமையாக அரசால் நடத்தப்படவில்லை. இந்த ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து அதனை ஜீ.வி.கே. என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து தமிழக அரசு இந்த சேவையை நடத்துகிறது. அந்த நிறுவனம் இந்த சேவையில் பணிபுரியும் கால் சென்டர், மருத்துவ தொழில் நுட்பம், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆகிய மூன்று பிரிவினைச் சேர்ந்தவர்களுக்கும் எவ்வளவு குறைந்த ஊதியம் கொடுத்து வேலை வாங்க முடியுமோ அவ்வளவு குறைந்த ஊதியத்தினை வழங்கி வேலை வாங்குகிறது.
Tuesday, 6 September 2011
இவர்களெல்லாம் மனிதர்கள் தானா ? அதிகார மமதையில் ஆடும் ஜி.வி.கே.வின் எச்.ஆர். , டி.எம்.ஒ.இ, மற்றும் பிளிட்
இந்தியாவில் அரசின் அனைத்து நிறுவனங்களிலும் தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன. ரயில்வே , போக்குவரத்து , விமானம் என்று அனைத்து துறைகளிலும் சங்கங்களோடு அரசு முறைபடி பேச்சுவார்த்தை நடத்துகிறது. நியாயமான கோரிக்கைகளை ஏற்கின்றன.இவை அனைத்தும் சுமூகமாக நடைபெறுகிறது. ஆனால் ஜி.வி.கே.நிர்வாகம் என்னவோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போலவும் , இவர்களுக்கு தொழிற்சங்க சட்டங்கள் பொருந்தாதது போலவும் நடந்து கொள்கிறார்கள் .108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பத்து பைசா கூட முதலீடு இல்லாமல் இடைத்தரகராக இருந்து கொண்டு ஆந்திர கம்பனி ஜி.வி.கே. லாபத்தை அள்ளி குவிக்கிறது. அரசிடமிருந்து அதிக அளவில் பணம் பெற்று கொண்டு தொழிலாளர்களுக்கு மிகக்குறைவான ஊதியத்தை அளித்து விட்டு , மக்களுக்கும் நல்ல சேவை சென்று அடையாமல் தனது அதீத லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஜி.வி.கே.நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
Monday, 5 September 2011
108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் அடிப்படை கோரிக்கைகளை ஜி.வி.கே. , நிர்வாகத்திடம் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளார் சங்கம்(108 AWU ) சமர்பித்துள்ளது.
நாகர்கோவிலில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை திரும்ப பணிக்கு சேர்க்க கோருதல் , மற்ற மாவட்டங்களில் துவங்கியுள்ள ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையை நிறுத்த கோருதல், 8 மணிநேர வேலை , முறையான சம்பள உயர்வு, சொந்த ஊரில் வேலை, முறையான வாகன பராமரிப்பு , முறையான மருத்துவ காப்பீடு , பி.எப். முறையாக பிடித்தம் செய்து முறையாக பி.எப் செலுத்துவது , ஒ.இ., டி.எம்., அர்.எம்., எச்.ஆர். ஆகியோர் தொழிலாளர்களை சட்டவிரோதமாக கொடுமைப்படுத்த கூடாது , மற்றும் இன்னும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி இஎம்அர்ஐ , ஜி.வி.கே. வின் சி.ஒ.ஒ.(C.O.O) சென்னை, மதுரை, கோவை, ஆர்.எம்.(R.Ms) , அனைத்து மாவட்டங்களிலும் உள்ள டி.எம்.,(D.Ms) சுகாதார துறை அமைச்சர் , சுகாதார துறை திட்ட அலுவலர் , தொழிலாளர் துறை அலுவலர்கள் ஆகியோருக்கு முறைபடி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்ப்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது .
Saturday, 3 September 2011
கேபிள் டி.வி.யை அரசே ஏற்றது போல 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
கலாநிதி மாறனின் சுமங்கலி கேபிள் விசன் மட்டுமே அனைத்து கேபிள் டி.வி.களையும் தனது அதிகாரம் , பணபலம் ஆகியவற்றின் துணை கொண்டு தமிழக மக்களை பகல் கொள்ளை அடித்து வந்தனர். மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் பதவிக்கு வந்தவுடன் கேபிள் டி.வியில் தனியார் சர்வாதிகாரத்தை ஒடுக்கி , அரசே அதை ஏற்று நடத்தி மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் டி.வி. கிடைக்கும்படி செய்துள்ளார்.
ஆந்திர அரசு, 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் இருந்து ஜி.வி.கே.வை விரட்ட தயாராகி வருகிறது.
ஜி.வி.கே. நிர்வாகம் தான் இந்திய அரசையே தலைமை தாங்கி நடத்துவது போல தனது ஊழியர்களை காட்டுமிரண்டிதனமாக மிரட்டி வேலை வாங்கி வந்தது.108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை சகட்டு மேனிக்கு பணிநீக்கம் செய்தல் , ஊழல் செய்தல் , வாகனத்தை சரியாக பராமரிக்காமல் இருப்பது, போலி கணக்கு எழுதுவது, கால் சென்டரில் காலிபணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது, தொழிலாளர் சட்டங்களை மதிக்காமல் செயல்படுவது என்று இந்திய அரசின் அரசியலமைப்புக்கு விரோதமாக அனைத்தையும் செய்து வந்தது. அரசிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி ஏழைமக்களுக்கு உரிய சேவை சென்றைடையாமல் மக்கள் பணத்தை ஏப்பம் விட்டு வந்தது. 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களின் காரணமாக ஜி.வி.கேவின் முகத்திரை தமிழகத்தில் மட்டுமல்ல ஆந்திராவிலும் கிழிக்கப்பட்டு விட்டது. தற்போது ஆந்திர அரசு ஜி.வி.கே.வின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி நிதி ஒதுக்கிட்டை முடக்கியுள்ளது.
AP CM to decide in GVK EMRI services soon
The Andhra Pradesh Chief Minister, Mr.N.Kiran Kumar Reddy, is likely to finalise a decision on the issue of continuation of the GVK Group, the private partner engaged in implementing the 108 ambulance service through Emergency Management Research Institute (EMRI).
Following a review meeting the Chief Minister had with officials of the Health Ministry, it was decided to take appropriate decision, which could either mean continuation of GVK to manage the project or invite fresh tenders to select another private company for its management.
Subscribe to:
Posts (Atom)



