இதுவரை வருடாந்திர சம்பள உயர்வு வழங்கும்; போது சிலருக்கு கூடுதலாகவும் சிலருக்கு குறைவாகவும் உயர்த்தப்படுகிறது வழக்கமாக இருந்து வருகிறது. பல சமயங்களில் சமீபத்தில் வேலைக்குச் சேர்ந்தவருக்கு கூடுதலாகவும் பணி மூப்பு உள்ளவருக்கு குறைவாகவும் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. காரணம் கேட்ட போது வேலைச் செயல்பாட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் (Performance) சம்பள உயர்வு வழங்கப்படுவதால் இவ்வேறுபாடு இருக்கத்தான் செய்யும் என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆனால் தங்களின் வேலைச் செயல்பாடு எவ்வாறு மதிப்பிடப்படுகிறது, என்றோ ஏன் குறைவாக சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்றோ அவரின் எந்தச் செயல்பாடு குறைபாடுடையது. அவற்றைப் போக்க அவர் என்ன செய்ய வேண்டும் என்றோ, எந்த ஊழியருக்கும் வெளிப்படையாகச் சொல்லப்படுவதில்லை.
(108AWU)Reg.No.1508/MDU, Affiliated with: CENTRAL ORGANISATION OF INDIAN TRADE UNIONS- COITU
Thursday, 15 March 2012
Friday, 9 March 2012
முதல்வரிடம் 108 ஆம்புலன்ஸ் சங்கம் சார்ப்பாக கோரிக்கை மனு அளிப்பு
அனுப்புநர்
“108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு”
கதவு எண்.21, நேதாஷி மெயின் ரோடு, முல்லை
நகர்,
மதுரை – 625002.
பெறுநர்
1. உயர்திரு. சீப் ஆப்ரேடிங் ஆபிசர் (COO) அவர்கள்
G.V.K.இஎம்ஆர்
ஐ 108 ஆம்புலன்ஸ் சேவை.
2. உயர்திரு. திட்ட இயக்குனர் அவர்கள்,
சென்னை.
பொருள்
: இஎம்டி , கால் சென்டர் ஊழியர்களுக்கு
அடிப்படைச் சம்பளத்துடன்
பஞ்சப்படியும் சேர்த்து வழங்கவும் -
சம்பள உயர்வும் உயர்த்தப்படும் சம்பளம் பணிமூப்பின் அடிப்படையில் உயர்த்தபடவும் - பேருந்து
கட்டணத்திற்கு பஸ்பாஸ் வழங்கவும் - கோருதல் சம்பந்தமாக.
Thursday, 5 January 2012
தமிழக முதல்வரின் உத்தரவை ஏற்க மறுக்கும் ஜி.வி.கே.
வேலை பார்க்கும் மகளிருக்கு பேறுகால விடுப்பு மூன்று மாதத்தில் இருந்து ஆறுமாதமாக உயர்த்தும்படி மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் இந்த உத்தரவு அனைத்து அலுவலங்களிலும் நடை முறைப்படுத்தப்படுகிறது. ஆனால் அரசியலமைப்பு சட்டத்தையே மதிக்காமல் லாபவெறி கொண்டு தொழிலாளர்களை சித்தரவதை செய்வதே தொழிலாக கொண்டு செயல்பட்டு வரும் ஜி.வி.கே நிறுவனம் முதல்வரின் இந்த உத்தரவை செயல்படுத்த மறுத்து வருகிறது.
Wednesday, 4 January 2012
தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு போனஸ் வழங்க வேண்டும்
அரசு, மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பொங்கலுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. உயிர்காக்கும் பணியில் கண் அயராது பணிசெய்யும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு (பைலட் ,இ.எம்.டி, மற்றும் கால்
சென்டர் ஊழியர்கள்) குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் சிறப்பாக கொண்டாட அவர்களுக்கு உரிய போனஸ் வழங்க வேண்டும்.
Friday, 23 December 2011
உயிரை கொடுத்து உழைக்கும் தொழிலாளர்களை பாடாய் படுத்தும் ஜி.வி.கே.
தேசிய நெடுஞ்சலைகள் திறக்கப்பட்ட பின்பு வாகனங்கள்
கட்டுப்பாடு இல்லாமல் வேகாமாக பயணிக்கின்றன. வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகளும் அதிகமாகி விட்டன. விபத்துகளில் அடிபட்டவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படுமானால் அவர்களின் பொன்னான உயிர்கள் காக்கப்படும். அந்த அரும்பணியில் மலையிலும், வெயிலினிலும் , கடும் குளிரிலும் கடமை தவறாமல் பணிபுரிபவர்கள் நமது 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள். அவர்களுக்கு வழங்கப்படுவது மிக குறைந்த ஊதியமாக இருந்தாலும் அவர்கள் தங்கள் பணியினை தொடர்வதற்கு சிறப்பு காரணம் என்னவென்றால் அவர்கள் செய்யும் உயிர் காக்கும் பணி தரும் நிறைவு தான். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இவ்வாறு மிகுந்த கடமை உணர்வோடும், சிரத்தையோடும், தங்களது கடுமையான உழைப்பை செலுத்தி நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் உழைக்கின்றனர். அந்த பலன்களை அறுவடை செய்யும் இந்திய அரசியல் அமைப்பை மதிக்காமல் செயல்பட்டு வரும் ஜி.வி.கே என்ற ஆந்திர நிறுவனத்திற்கு மனசாட்சி என்பது ஒரு துளியும் கிடையாது.
Tuesday, 20 December 2011
HC notice to probe 108 ambulance service
The Madurai bench of the Madras high court has ordered notice to the authorities on a plea to order an enquiry into alleged irregularities in the 108 ambulances service scheme. The bench comprising Justice K N Basha and Justice M Venugopal gave the directive to the principal secretaries of Health and Family Welfare, Transport and Home departments on a petition filed by one A Jeyaprakash Narayanasamy of Thoothukudi.
108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் முறைகேடு : விசாரிக்ககோரி வழக்கு தலைமை செயலாளர் பதில் அளிக்க ஐகோர்டு உத்தரவு
108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் முறைகேடு குறித்து விசாரிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் தலைமை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
800 கோடி இழப்பீடு
108 ஆம்புலன்ஸ் சேவைக்கான அனைத்து ஆம்புலன்ஸ் வேன்களையும் மத்திய அரசு அளித்துள்ளது. ஆனால் இந்த சேவைக்கான காண்ட்ராக்டு ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ராமலிங்க ராஜு (தற்போது ஜி.வி.கே ) என்பவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் மற்ற ஆம்புலன்சையும் சேர்க்கும் போது கான்ட்ராக்ட்டு அளிக்கப்பட்டுள்ள நபருக்கு வருமானம் குறைந்து விடும் என்ற நோக்கத்தில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது தெரிய வருகிறது .
Subscribe to:
Posts (Atom)
