Wednesday, 7 August 2013

ஆம்புலன்ஸ் பணியாளர் கரூரில் உண்ணாவிரதம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் வாயில் கறுப்பு துணிகட்டி உண்ணவிரதப் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு, 108 ஆம்புலன்ஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூர் மாவட்ட அமைப்பு சார்பில், தாலுகா அலுவலகம் முன், வாயில் கறுப்பு துணிகட்டி நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்துதல், ஜி.வி.கே., நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தல் உள்பட, 14 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி, மாநில அமைப்பு செயலாளர் பால்வண்ணன் பேசினார்.
கரூர் மாவட்ட தலைவர் சுந்தரவடிவேல் உட்பட பலர் பங்கேற்றனர். ஆம்புலன்ஸ் பைலட் முத்துகுமார் நன்றி தெரிவித்தார்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=775641

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.
மத்திய, மாநில அரசுகளால் அமைக்கப்பட்ட தொழிலாளர் நலச் சட்டங்கள் எதுவும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்குப் பின்பற்றப்படுவதில்லை. எந்த சட்ட உரிமைகளும் வழங்கப்படவில்லை. இந்த உரிமைகளை வழங்க வேண்டும்.
பெண் ஊழியர்கள் குறை தீர்க்க குழு அமைக்க வேண்டும், பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும், குறைந்தபட்சக் கூலி சட்டத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும்.
சம உழைப்புக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், 24 மணி நேரமும் பணியாற்றும் ஊழியர்கள் விபத்தில் இறந்தாலோ, நிரந்தரமாக ஊனம் ஏற்பட்டாலோ இழப்பீடு இல்லை.
எனவே இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு கரூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத் தலைவர் சுந்தரவடிவேல் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலர் பால்கண்ணன், நிர்வாகிகள் சரவணன், முத்துக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.
இதில் பங்கேற்ற தொழிலாளர்கள் நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வாயில் கருப்புத் துணியைக் கட்டியிருந்தனர்.

Friday, 2 August 2013

The GVK-EMRI 108 Ambulance service management personnel Mr. Paul Robinson and Mr. Kumaran acting as District managers of Trichy and Salem districts are resorting to acts of victimisation against our union activists who participated in lawful trade union activities.

To
The Project Director,
Tamil Nadu Health Systems Project (TNHSP),
3rd Floor, DMS Annex New Building,
259 Anna Salai, Teynampet,
Chennai 600 006, Tamil Nadu.

Respected Sir/ Madam
The GVK-EMRI 108 Ambulance service management personnel Mr. Paul Robinson and Mr. Kumaran acting as District managers of Trichy and Salem districts are resorting to acts of victimisation against our union activists who participated in lawful trade union activities.

Sunday, 28 July 2013

Indefinite strike by Andhra Pradesh 108 Ambulance Workers Governments are shooting two birds in a single shot

The state and central governments are slow by slow washing their hands off in public health and education. These two sectors are very important as far as the well being of common people are concerned. If any state wants to pose as a welfare state in the real sense of the term it can be seen only in the quantum of allotment it makes for these two sectors. Because of the indifferent and apathetic attitude of the governments in the fields of health and education private entries into them are becoming rampant in the recent past.

Before the Labour Commissioner

To
Labour Commissioner,
Commissioner of Labour Office,
DMS, Teynampet,
Chennai.
Respected Sir,
We on behalf of the 108 Ambulance Workers Union – a registered trade union functioning in the public private partnership concern GVK – EMRI, Tamilnadu bring to your knowledge the anti worker attitude practiced by the management in conducting domestic enquiries utterly violating the principle of natural justice.

Saturday, 27 July 2013

சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 26.07.2013 அன்று 2 மணி முதல் 3 மணி வரை நடத்தியது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் அமைப்பு செயலாளர்கள் தோழர்.சிவக்குமார் , பால் கண்ணன் , பொது செயலாளர் செந்தில் உட்பட திரளான 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டார்கள். தோழர் கருப்பன் சித்தார்த்தன் சிறப்புரையாற்றினார். ஆந்திர , கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் ஸ்ட்ரைக்கிற்கு ஆதரவு தெரிவித்தும் , ஊழியர்களை பழிவாங்கும் நிர்வாகத்தை கண்டித்தும் கோசங்கள் எழுப்பட்டன. பேச்சு வார்த்தை தோழ்வி அடைந்தால் ஸ்ட்ரைக்கில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர். 

வேலை நிறுத்தம் "108' ஆம்புலன்ஸ் பணியாளர் எச்சரிக்கை

"சமசர பேச்சுவார்த்தை முயற்சி தோல்வி அடைந்ததால், விரைவில், வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்' என, "108' ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் எச்சரித்து உள்ளது.
ஊதிய உயர்வு, எட்டு மணி நேர வேலை, முறையான இடமாறுதல் கொள்கை, அடிப்படை வசதிகளுடன் கூடிய தங்குமிடம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அவசரகால, "108' ஆம்புலன்ஸ் சேவை பணியாளர், பல கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள, தொழிலாளர் துறை அலுவலகத்தில், சமரச பேச்சுவார்த்தைக்கு, நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், "108' ஆம்புலன்ஸ் சேவையை நிர்வகிக்கும், இ.எம்.ஆர்.ஐ., நிறுவன தரப்பில் யாரும் பங்கேற்காததால், பேச்சுவார்த்தை, அடுத்த மாதம், 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து, "108' ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க அமைப்பு செயலர் பால்கண்ணன் கூறுகையில், ""சமரச பேச்சு வார்த்தை முயற்சி தோல்வி அடைந்ததால், அடுத்த கட்டமாக, விரைவில், வேலை நிறுத்த போராட்டம் செய்ய திட்டமிட்டு உள்ளோம். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்,'' என்றார்.
நன்றி: தினமலர் 
http://www.dinamalar.com/district_detail.asp?id=744370