(108AWU)Reg.No.1508/MDU, Affiliated with: CENTRAL ORGANISATION OF INDIAN TRADE UNIONS- COITU
Friday, 30 August 2013
கோவை மண்டல அளவிலான வேலைநிறுத்த ஆயத்த கூட்டம் பெரம்பலூரில்
கடந்த 30/08/2013 அன்று கோவை மண்டல அளவிலான வேலைநிறுத்த ஆயத்த கூட்டம் பெரம்பலூரில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.இதில் பெரம்பலூர்,திருச்சி,கரூர்,நாமக்கல் மற்றும் அரியலூர் மாவட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
வரும் 11/09/2013 அன்று நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் மாநிலம் தழுவிய வேலைநிறுத்ததிற்கு முழுமையான ஆதரவு தருவதாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர் திரு பால் கண்ணன் தலைமை ஏற்று உரையாற்றினார்.
மேலும் பெரம்பலூர் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .இறுதியாக நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக வளர்ச்சி நிதியை கோவை மண்டல செயலாளர் திரு சுரேஷ்குமார் மற்றும் துணை தலைவர் சத்தியமூர்த்தி அவர்களும் திரு பால் கண்ணன் அவர்களிடம் வழங்கினர்.

Wednesday, 28 August 2013
கோவை மண்டல அளவில் வேலைநிறுத்த ஆயத்த கூட்டம் நாமக்கல்லில்

கடந்த 27/08/2013 அன்று கோவை மண்டல அளவிலான வேலைநிறுத்த ஆயத்த கூட்டம் நாமக்கல்லில் கவின் கிஷோர் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு கோவை மண்டல செயலாளர் திரு சுரேஷ்குமார் தலைமை வகித்தார்,மாவட்ட தலைவர் திரு மகேஷ் வரவேற்ப்புரையும் மாநில நிர்வாக குழு உறுப்பினர் திரு சாமிவேல் சிறப்புரையும் ஆற்றினர்,மாவட்ட துணை தலைவர் திரு சத்தியமூர்த்தி நன்றியுரை ஆற்றினார். திருச்சி,கரூர்,சேலம்,திருப்பூர்,நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஓய்வில் உள்ள அனைத்து ஊழியர்களும் இதில் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மதுரையில் நடந்த வேலைநிறுத்த ஆயத்த கூட்டதில் நடந்த நிகழ்வுகள் ஊழியர்களிடம் பரிமாறப்பட்டன.வரும் 11/09/2013 அன்று சென்னையில் தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் கோவை மண்டலத்தில் வேலை நிறுத்தத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Tuesday, 27 August 2013
மாநிலம் தழுவிய வேலைநிறுத்த ஆயத்த கூட்டம் மதுரையில்
கடந்த 25/08/2013 அன்று மதுரை நாராயணபுரத்தில் நமது 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாநில அளவிலான வேலைநிறுத்த
ஆயத்த கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.கூட்டதிற்கு நமது சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர்கள் திரு பால்கண்ணன் மற்றும் த சிவகுமார் அவர்களும் தலைமை வகித்தனர்.
மேலும் கர்நாடகா 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் நான்கு பேர்(கர்நாடகா மாநில தலைவர் ஸ்ரீதர்,துணை தலைவர் ஸ்ரீதரமூர்தி,பொதுசெயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் கிரீஸ் ) சிறப்பு அழைபாளர்களாக கலந்து கொண்டு தங்களது வேலைநிறுத்த அனுபவங்களையும் ஆலோசனைகளையும் நமக்கு வழங்கினர்.
கூட்டதில் மாவட்ட அளவிலான தொழிற்சங்க தலைவர்களையும் பொறுப்பில் உள்ள ஊழியர்களையும் பழிவாங்கும் நடவடிக்கைகளை நிர்வாகம் தொடர்ந்து செய்து வருவதால் அதற்கு நிரந்தர தீர்வு வேலைநிறுத்தம் தான் என்று தீர்மானிக்கப்பட்டு, வரும் 11/09/2013 அன்று சென்னையில் தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நடைபெறும் பேச்சுவார்தை தோல்வி அடைந்தால் அதே தேதியில் வேலை நிறுத்த அறிவிப்பு செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் மாநிலம் முழுமைக்கும் உள்ள மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஆயத்த கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.கூட்டதிற்கு நமது சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர்கள் திரு பால்கண்ணன் மற்றும் த சிவகுமார் அவர்களும் தலைமை வகித்தனர்.
மேலும் கர்நாடகா 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் நான்கு பேர்(கர்நாடகா மாநில தலைவர் ஸ்ரீதர்,துணை தலைவர் ஸ்ரீதரமூர்தி,பொதுசெயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் கிரீஸ் ) சிறப்பு அழைபாளர்களாக கலந்து கொண்டு தங்களது வேலைநிறுத்த அனுபவங்களையும் ஆலோசனைகளையும் நமக்கு வழங்கினர்.கூட்டதில் மாவட்ட அளவிலான தொழிற்சங்க தலைவர்களையும் பொறுப்பில் உள்ள ஊழியர்களையும் பழிவாங்கும் நடவடிக்கைகளை நிர்வாகம் தொடர்ந்து செய்து வருவதால் அதற்கு நிரந்தர தீர்வு வேலைநிறுத்தம் தான் என்று தீர்மானிக்கப்பட்டு, வரும் 11/09/2013 அன்று சென்னையில் தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நடைபெறும் பேச்சுவார்தை தோல்வி அடைந்தால் அதே தேதியில் வேலை நிறுத்த அறிவிப்பு செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் மாநிலம் முழுமைக்கும் உள்ள மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நாமக்கல்லில் ஆலோசனை கூட்டம்
கடந்த 25.07.2013 அன்று ,
நாமக்கல்லில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டதில் நமது சங்க உறுப்பினர் இ.எம்.டி ரமேஷ் அவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு மருத்துவ உதவித்தொகையாக ரூபாய் 3000 மாவட்ட சங்கதிலிருந்து வழங்கப்பட்டது.
இதில் கரூர் மாவட்ட சங்க தலைவி செல்வி கோமதி நாமக்கல் மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் ஓய்வில் உள்ள அனைத்து ஊழியர்களும் கலந்துகொண்டனர் .

தினமலரில் 108 ஆம்புலன்சின் மோசமான பராமரிப்பு குறித்து வந்த செய்தி- பைலட் முத்துராமலிங்கத்தை வேலையை விட்டு நிறுத்தியது நிர்வாகம்.
வியாசர்பாடி, கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் நிரோஷா. பிரசவத்துக்காக புளியந்தோப்பில் உள்ள, மாநகராட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு குழந்தை பிறந்ததும், திடீரென மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டது.அவசர சிகிச்சை தேவை என்பதால், ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, அவரை ஏற்றி கொண்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனம், ராயபுரம் நோக்கி சென்றது.புளியந்தோப்பு நெடுஞ்சாலை, காவல்நிலையம் அருகே சென்ற போது, திடீரென வாகனத்தின் முன்பக்க ‘டயர்’ வெடித்து, ஆம்புலன்ஸ் நிலை தடுமாறியது. சாலை தடுப்பில் மோத முயன்ற நிலையில், ஓட்டுனர் முத்துராமலிங்கம் சாதுர்யமாக, வாகனத்தை நிறுத்தினார். இதில், அவரது கையில் அடிபட்டது. பெண் மருத்துவ உதவியாளர் தலையிலும் அடிபட்டது. அதிர்ஷ்டவசமாக, சிகிச்சைக்கு சென்ற நிரோஷா, பாதிப்பின்றி தப்பினார். சற்று சிக்கல் ஆகியிருந்தாலும், உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கும். இதுவே தினமலரில் வந்த பைலட் முத்துராமலிங்கம் பற்றிய செய்தியாகும். இந்த செய்தி வந்த வுடன் உடனடியாக நிர்வாகம் ஆம்புலன்சில் உள்ள குறைபாடுகளை சரி செய்து இருக்க வேண்டும். ஆனால் உடனே கோவம் கொண்ட எச்.ஆர். அப்பாத்துரை முத்துராமலிங்கத்தை வேலையை விட்டு நிறுத்தி விட்டார்.அப்பாத்துரையின் இந்த அராஜக செயல்களுக்கு எதிராக இது குறித்து விரைவில் உயர் நீதிமன்றத்தில் முத்துராமலிங்கம் வழக்கு தொடுக்க உள்ளார்.
Subscribe to:
Posts (Atom)