108 ஆம்புலன்ஸ் சேவையை ஏற்று நடத்தவும் , அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் பெறும் விகிதத்தில் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கைகளை வைத்தும் , கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிகப் பணிநீக்க உத்தரவினை திரும்பப் பெறுதல், தன்னிச்சையாகப் பழிவாங்கும் நோக்குடன் இடமாற்ற உத்தரவுகள் வழங்குவதையும் உள்நோக்குடன் குற்றச்சாட்டுக் குறிப்பாணைகள் வழங்கும் போக்கினையும் கைவிடுதல், 8 மணிநேரத்திற்கு அதிகமாகச் செய்யும் வேலைக்கு ஓவர்டைம் ஊதியம் வழங்குதல், அரசு விடுமுறை நாட்களில் வேலை செய்பவர்களுக்கு இரட்டைச் சம்பளமோ அல்லது மாற்று விடுப்போ வழங்குதல், தன்னிச்சையாகக் கடந்த காலங்களில் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளரைப் பணித்தொடர்ச்சியுடன் மீண்டும் வேலைக்கு எடுத்தல், வாகனத்தைத் தூய்மையாகவும் உரியமுறையிலும் பராமரிப்பதற்கும், ஊழியர்கள் ஓய்வு நேரத்தில் தங்கவும் உரிய ஏற்பாடுகள் செய்தல். போன்ற கோரிக்கைகளை வழியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்ப்பாக தமிழகம் முழுவதும் 25 க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் திருச்சி, மதுரை , திருநெல்வேலி, கடலூர், சேலம் ஆகிய மாவட்ட தலைநகரங்களில் இன்று( 8 .9 .2011 ) காலை 10 மணி முதல் மாலை 5 மணி உண்ணாவிரதம் நடைபெற்றது.
திட்டத்தை வகுத்தது அரசாங்கம் ,
சம்பளம் கொடுப்பதும் அரசாங்கம்,
செலவினை ஏற்பதும் அரசாங்கம் ,
நிர்வாகம் மட்டும் ஜி.வி.கே.யிடம்,
மாநில அரசே மாநில அரசே ,
ஏற்று நடத்து ஏற்று நடத்து ,
108 ஆம்புலன்ஸ் சேவையை ஏற்று நடத்து ,
108 சேவைதனை
ஏற்று நடத்த ஆகும் செலவில்
100 சதமும் அரசின் பொறுப்பில்
செலவனைத்தையும் செய்யும் அரசால்,
சேவையை ஏற்க முடியாதா ?
சிந்திப்பீர் சிந்திப்பீர்.
தனியார் நடத்து தொழில் எதிலும்,
லாப நோக்கம் இருந்தே தீரும்,
ஒத்துப்போக முடியாது.
மாநில அரசே மாநில அரசே ,
ஏற்று நடத்து , ஏற்று நடத்து.
108 சேவையை ஏற்று நடத்து .
ஊதியம் வழங்கு ஊதியம் வழங்கு ,
கட்டுபடியான ஊதியம் வழங்கு,
உறுதி செய் , உறுதி செய் ,
8 மணி நேர வேலையை உறுதி செய் ,
ஊதியம் வழங்கு ஊதியம் வழங்கு ,
உறுதி செய் உறுதி செய்
8 மணி நேர வேலையை உறுதி செய் ,
ஊதியம் வழங்கு , ஊதியம் வழங்கு ,
கூடுதலாக வாங்கும் வேலைக்கு ,
ஓவர்டைம் ஊதியம் வழங்கு ,
ஊதியம் வழங்கு , ஊதியம் வழங்கு ,
அரசு விடுமுறை தினங்களில்
நாங்கள் செய்யும் வேலைக்கு ,
இரண்டு மடங்கு ஊதியம் வழங்கு ,
இரண்டு மடங்கு ஊதியம் வழங்கு,
கைவிடு , கைவிடு ,
பழிவாங்கும் போக்கை கைவிடு ,
பராமரி , பராமரி ,
வாகனகளைப் பராமரி,
செய்துகொடு செய்துகொடு ,
ஒய்விட வசதி செய்துகொடு ,
கைவிடு , கைவிடு,
கெடுபிடிப் போக்கைக் கைவிடு,
தோற்றதில்லை , தோற்றதில்லை ,
தொழிலாளர் இயக்கம் தோற்றதில்லை,
மோதாதே மோதாதே ,
தொழிற்சங்கத்தோடு மோதாதே ,
ஒன்றுபடுவோம் , போராடுவோம் ,
போராடுவோம் வெற்றி பெறுவோம்,
தர்மம் என்றும் தோற்றதில்லை ,
அதர்மம் என்றும் வென்றதில்லை .
என்று உணர்ச்சி பூர்வமாக கோஷம் எழுப்பினார்கள் . பொது மக்களும் ஆர்வமாக வந்து போரட்டத்திற்கு தங்கள் ஆதரவினை தெரிவித்தார்கள். தங்கள் பகுதிக்கு முதல்வர் வரும் போது அவரிடம் தாங்களும் இந்த கோரிக்கையை வழியுறுத்திவதாகவும் கூறினார்கள்.
இந்த உண்ணாவிரதத்தை தடுக்க ஜி.வி.கே.நிர்வாகம் முழு மூச்சாக வேலை பார்த்தது . பல்வேறு மிரட்டல்களை தொழிலாளர்களுக்கு விடுத்தது, இருந்தும் நமது சங்க தொழிலாளர்கள் தையிரியமாக உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு நிர்வாகம் செய்யும் முறைகேடுகளை கொண்டு சென்று அரசே 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை ஏற்று நடத்த வழியுறுத்தி நியாயமான முறையில் நடத்தும் அறப்போராட்டத்தை கூட நிர்வாகம் சட்ட விரோதமாக நசுக்க பார்ப்பது அதன் கொள்ளை லாபம் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற பயம் தான் காரணம்.
திட்டத்தை வகுத்தது அரசாங்கம் ,
சம்பளம் கொடுப்பதும் அரசாங்கம்,
செலவினை ஏற்பதும் அரசாங்கம் ,
நிர்வாகம் மட்டும் ஜி.வி.கே.யிடம்,
மாநில அரசே மாநில அரசே ,
ஏற்று நடத்து ஏற்று நடத்து ,
108 ஆம்புலன்ஸ் சேவையை ஏற்று நடத்து ,
108 சேவைதனை
ஏற்று நடத்த ஆகும் செலவில்
100 சதமும் அரசின் பொறுப்பில்
செலவனைத்தையும் செய்யும் அரசால்,
சேவையை ஏற்க முடியாதா ?
சிந்திப்பீர் சிந்திப்பீர்.
தனியார் நடத்து தொழில் எதிலும்,
லாப நோக்கம் இருந்தே தீரும்,
ஒத்துப்போக முடியாது.
மாநில அரசே மாநில அரசே ,
ஏற்று நடத்து , ஏற்று நடத்து.
108 சேவையை ஏற்று நடத்து .
ஊதியம் வழங்கு ஊதியம் வழங்கு ,
கட்டுபடியான ஊதியம் வழங்கு,
உறுதி செய் , உறுதி செய் ,
8 மணி நேர வேலையை உறுதி செய் ,
ஊதியம் வழங்கு ஊதியம் வழங்கு ,
உறுதி செய் உறுதி செய்
8 மணி நேர வேலையை உறுதி செய் ,
ஊதியம் வழங்கு , ஊதியம் வழங்கு ,
கூடுதலாக வாங்கும் வேலைக்கு ,
ஓவர்டைம் ஊதியம் வழங்கு ,
ஊதியம் வழங்கு , ஊதியம் வழங்கு ,
அரசு விடுமுறை தினங்களில்
நாங்கள் செய்யும் வேலைக்கு ,
இரண்டு மடங்கு ஊதியம் வழங்கு ,
இரண்டு மடங்கு ஊதியம் வழங்கு,
கைவிடு , கைவிடு ,
பழிவாங்கும் போக்கை கைவிடு ,
பராமரி , பராமரி ,
வாகனகளைப் பராமரி,
செய்துகொடு செய்துகொடு ,
ஒய்விட வசதி செய்துகொடு ,
கைவிடு , கைவிடு,
கெடுபிடிப் போக்கைக் கைவிடு,
தோற்றதில்லை , தோற்றதில்லை ,
தொழிலாளர் இயக்கம் தோற்றதில்லை,
மோதாதே மோதாதே ,
தொழிற்சங்கத்தோடு மோதாதே ,
ஒன்றுபடுவோம் , போராடுவோம் ,
போராடுவோம் வெற்றி பெறுவோம்,
தர்மம் என்றும் தோற்றதில்லை ,
அதர்மம் என்றும் வென்றதில்லை .
என்று உணர்ச்சி பூர்வமாக கோஷம் எழுப்பினார்கள் . பொது மக்களும் ஆர்வமாக வந்து போரட்டத்திற்கு தங்கள் ஆதரவினை தெரிவித்தார்கள். தங்கள் பகுதிக்கு முதல்வர் வரும் போது அவரிடம் தாங்களும் இந்த கோரிக்கையை வழியுறுத்திவதாகவும் கூறினார்கள்.
இந்த உண்ணாவிரதத்தை தடுக்க ஜி.வி.கே.நிர்வாகம் முழு மூச்சாக வேலை பார்த்தது . பல்வேறு மிரட்டல்களை தொழிலாளர்களுக்கு விடுத்தது, இருந்தும் நமது சங்க தொழிலாளர்கள் தையிரியமாக உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு நிர்வாகம் செய்யும் முறைகேடுகளை கொண்டு சென்று அரசே 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை ஏற்று நடத்த வழியுறுத்தி நியாயமான முறையில் நடத்தும் அறப்போராட்டத்தை கூட நிர்வாகம் சட்ட விரோதமாக நசுக்க பார்ப்பது அதன் கொள்ளை லாபம் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற பயம் தான் காரணம்.
இந்த போராட்டத்தில் தையிரியமாக கலந்து கொண்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் தனது நன்றியை தெரிவித்து கொள்கிறது. இது தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் ஒரு மாபெரும் முன்னேற்றம் என்று கூறலாம்.தொடர்ந்து போராடும், நமது உரிமைகளை வெல்வோம் .
No comments:
Post a Comment