விருதுநகர் வினோத் குமார் 2012 ஜனவரியிலையே வேலையை விட்டு விடுகிறார். ஆனால் அவருக்கு 2013 ஏப்ரல் மாதம் 30 நாள் வேலை பார்த்ததற்கான சேலரி சிலிப் வருகிறது. ஆனால் அந்த பணம் அவரது கணக்கில் வரவில்லை. இவ்வாறு அவர் வேலை பார்த்தாக 13 மாத சம்பளம் GVK அரசிடம் இருந்து ஏமாற்றி வாங்கியுள்ளது. இதுபோல 198 ஊழியர்கள் இவ்வாறு வேலையை விட்டு நின்ற ஊழியர்களின் பெயர்களிலும் மோசடி நடைபெற்றிருக்க கூடும் என்ற சந்தேகத்தில் நமது சங்கத்தின் சார்பில் அரசு பணத்தை மோசடி செய்து வருகின்ற GVK மீது மதுரை காவல் துறை ஆணையாளர், மற்றும் விஜிலென்ஸ் ஆகியவற்றில் புகார் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.ஆனால் அவற்றில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது விசிலன்ஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கடிதத்தின் படி அரசு சுகாதார துறை செயலருக்கு நமது கடிதம் அனுப்பி வைக்கப் பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது. தற்போது அந்த வழக்கு அடுத்த வாரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
(108AWU)Reg.No.1508/MDU, Affiliated with: CENTRAL ORGANISATION OF INDIAN TRADE UNIONS- COITU
Monday, 25 November 2013
Wednesday, 6 November 2013
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்
கடந்த31.10.2013 அன்று திண்டுக்கல்லில் நமது 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நமது மாநில தலைவர் திரு வரதராஜன் அவர்கள் தலைமை வகித்தார்,மாநில பொதுசெயலாளர் திரு செந்தில் அவர்களும் மாநில அமைப்பு செயலாளர் திரு பால்கண்ணன் மற்றும் மாநில துணை தலைவர் மாரிசாமி அவர்களும் முறையே வரவேற்புரை, சிறப்புரை மற்றும் நன்றி உரையாற்றினர்.இதில் மதுரை,தேனி,திண்டுக்கல்,விருதுநகர்,நெல்லை,குமரி,சிவகங்கை,கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து உழியர்கள் கலந்து கொண்டு வெற்றிபெற செய்தனர்..

Friday, 1 November 2013
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் கோவை மண்டல அளவிலான மாபெரும் உண்ணாவிரதம் ஈரோட்டில்
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ,108 அவசரகால ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஈரோட்டில் கடந்த 28.10.2013 அன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியன் டிரேடு யூனியன் மத்திய அமைப்பில் இணைந்த ,108 அவசரகால ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ,கோவை மண்டல அளவிலான உண்ணாவிரதபோரட்டம் நடந்தது.
ஈரோடு, சேலம்,நாமக்கல்,தருமபுரி,கிருஷ்ணகிரி,கோவை,ஊட்டி,திருப்பூர்,கரூர் மாவட்டங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் மற்றும் அவசர மருத்துவ உதவியாளர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட அமைப்பு செயலாளர் பால்கண்ணன் தலைமை வகித்தார்,ஈரோடு மாவட்ட செயலாளர் சிவகுமார் வரவேற்றார்,கோவை மண்டல செயலாளர் சுரேஷ்குமார் நன்றி உரையாற்றினர்.
வாகன பராமரிபின்மையால் ஏற்படும் விபத்து,108 உழியர்களின் உயிரிழப்புக்கு சட்ட உதவிகள்,இழப்பீடு,பணி பாதுகாப்பு மறிக்கப்படுகிறது.தொழிலாளர் நல சட்டப்படி வழங்கப்பட வேண்டிய குறைந்த பட்ச 12%போனஸ் கூட வழங்கப்படுவதில்லை.
8மணி நேரத்துக்கு மேல் பணியாற்றும் உழியர்களுக்கு ஓடி மற்றும் அதற்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை.
பணி மூப்பு அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்படுவதில்லை,அதற்க்கு மாறாக ரகசிய மதிப்பீட்டு முறை பின்பற்றப்படுகிறது.
முறையான இடமாறுதல் கொள்கை வகுக்கப்படவில்லை,சங்கத்தின் முன்னணி உழியர்களை பழிவாங்குவதர்க்காக மட்டுமே இடமாறுதல் செய்யப்படுகிறது.
இது தவிர 600க்கும் மேற்பட்ட பெண் உழியர்கள் பணிபுரியும் இடத்தில்,அடிப்படை வசதி கூட இல்லை.அரசு விடுமுறை நாட்களில் கூட விடுப்போ ,இதர நாட்களில் பணிபுரியும் போது இரட்டிப்பு சம்பளமோ வழங்குவதில்லை.இபிரச்சனைகளுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் நமது உண்ணாவிரதத்திற்கு அதரவு கொடுத்து ஒத்துழைத்து வெற்றிபெற செய்தனர். .

Subscribe to:
Posts (Atom)