108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் வியாழக்கிழமை தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.108 ஆம்புலன்ல் தொழிலாளர் சங்கம் சார்பில்நடைபெற்ற இப்போராட்டத்தில், சங்கத்தின் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். தன்னிச்சையாக வேலை நீக்கம் செய்யப்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.