மனு அளிக்கும் போராட்டத்தின் நான்காவது கட்டமாக 22 .07 .2011 வெள்ளிகிழமை அன்று நாமக்கல் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்து தங்கள் பதிமூன்று அம்ச கோரிக்கையை வழியுறுத்தி மனு அளித்தனர். மாவட்ட ஆட்சி தலைவர் தொழிலாளர் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்தார் ஏற்கனவே 20 மாவட்டகளை சேர்ந்த தொழிலாளர்கள் மனு அளித்துள்ளனர். நமது தொடர் போராட்டத்தில் நாமக்கல் மாவட்டமும் இணைந்துள்ளது
(108AWU)Reg.No.1508/MDU, Affiliated with: CENTRAL ORGANISATION OF INDIAN TRADE UNIONS- COITU
Showing posts with label emri108 ambulance workers union. Show all posts
Showing posts with label emri108 ambulance workers union. Show all posts
Friday, 22 July 2011
Monday, 18 July 2011
108 ஆம்புலன்ஸ் சங்க உறுப்பினர் விண்ணப்ப படிவத்தை எடுத்து சென்ற டி.எம். மீது புகார் அளிப்பு
நமது சங்கத்தில் உறுப்பினராக சேருவதற்கு முதுகுளத்தூர் பைலட் விண்ணப்ப படிவத்தை தான் தங்கும் அறையில் வைத்திருந்தார்.
முதுகுளத்தூர் வந்த ராமநாதபுரம் டி.எம். பால் ராபின்சன், 15 .07.2011 அத்துமீறி பைலட்டின் அறையில் நுழைந்து விண்ணப்ப படிவத்தையும் எடுத்து சென்றார். அவர் மீது கிரிவியஸ் செல்லில் புகார் அளிக்கப்பட்டது. அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் நமது சங்கத்தின் சார்ப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரினை விசாரித்த காவல் ஆய்வாளர் ராமநாதபுரம் டி.எம். பால் ராபின்சனை விசாரணைக்கு அழைத்துள்ளார்.
13 மாவட்டங்களை சேர்ந்த 108 ஊழியர்கள் மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் மனு அளித்தனர்
18 .07 .2011 திங்கள் கிழமை மனுகொடுக்கும் போராட்டத்தின் மூன்றாவது கட்டமாக திருநெல்வேலி , ராமநாதபுரம், சிவகங்கை , திண்டுக்கல், கரூர்,திருச்சி ,ஈரோடு, உதகமண்டலம், அரியலூர், தஞ்சாவூர், நாகபட்டினம் , விழுப்புரம், கிருஷ்ணகிரி,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் இன்று அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் தங்களது 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனு அளித்தனர். திருச்சி மாவட்ட ஒ.இ. மற்றும் , டி.எம் .ஆகிய இருவரும் அந்த மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் செல்லக்கூடாது என்று பலவாறாக மிரட்டல் விடுத்தனர். ஆனாலும் மிரட்டலுக்கும், பசப்பு வார்த்தைகளுக்கும் பயம் கொள்ளாமல் அனைவரும் மனு அளிக்க கலந்து கொண்டனர். இந்த மூன்றாடண்டு காலமாக ஜி.வி.கே. நிறுவனம் அதில் பணி புரியும் ஊழியர்களை ஈவிரக்கமின்றி சுரண்டி வருகிறது. மிக குறைந்த ஊதியம், தொழிலாளர் சட்ட விரோதமாக 12 மணி நேரம் வேலை, என்று நாகரீக சமுதாயம் ஏற்றுக்கொள்ளவே இயலாத அளவிற்கு பல கொடுமைகளை இந்த நிறுவனம் தொழிலார்களுக்கு இளைத்து வருகிறது.
தினமலர்: உயிர் காக்கும் 108 ஐ காப்பாற்ற அரசு நடவடிக்கை தேவை.
ஊழியர்கள் பற்றாக்குறையால் 108 ஆம்புலன்ஸ் திட்டம் முடங்கும் அபாயத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும், தி.மு.க., ஆட்சிக் காலத்தில் ,உயிர் காக்கும் உன்னத சேவை திட்டத்தின் கீழ் , 108 அம்புலன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் , அதிநவீன வசதிகள் கொண்ட கருவிகளுடனும், 500க்கும் மேற்பட்ட இலவச ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன.
Sunday, 17 July 2011
தகவல் உரிமை சட்டபடி கோரிப்பெற்ற இஎம்ஆர்ஐ பற்றிய தகவல்கள்
1 . ஊழியர்களுக்கு அரசின் வரன்முறை ஊதியமா ? தொகுப்பு ஊதியமா?
பதில் : அரசின் வரன்முறை ஊதியம் இல்லை, தொகுப்பு ஊதியம் இல்லை .
2.ஓவர் டைம் பணிபளுவிற்கு ஒ.டி. சம்பளம் வழங்கப்படுகிறதா?
பதில்: மாற்று விடுப்பு எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
3. 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை நடத்துகிற EMRI பதிவு செய்யப்பட்டிருப்பது டிரஸ்டா ?
பதில் : சொசைட்டி ஆக்டின்படி பதிவு செய்யப்பட்டிருக்கிறது .
Wednesday, 13 July 2011
கோவை: முத்தரப்பு பேச்சுவார்த்தை தொழிலாளர்களின் கோரிக்கைக்கு 15 நாள் கெடு
13.07.2011,கோவையில் தாசில்தார், அர்.எம்., ஜேடி,மற்றும்
நமது 108 ஆம்புலன்ஸ் சங்க தொழிலாளர்கள்
பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தில் நிறுவனம் தொழிலாளர்களுக்கு இழைத்துவரும் பல்வேறு இன்னல்களை நமது சங்கத்தினர் எடுத்துவைத்தனர். அத்தோடு தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் பி.எப். மற்றும் இஎஸ்ஐ, முறையாக செலுத்தப்படுவதில்லை,சட்டப்படி 8 மணி நேரம் வேலை நேரமாக்கப்பட வேண்டும், கூடுதல் நேரத்திற்கு ஒடி தருதல் தொழிலாளர்களுக்கு சொந்த ஊரில் வேலை என்ற பல்வேறு கோரிக்கைகைகளை வைத்தனர். தாசில்தார் தொழிலாளர்கள் கேட்பது அனைத்துமே நியாயமான கோரிக்கைகள் என்று கூறினார். நிர்வாகம் இன்னும் 15 நாளில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளது. தொடர்ந்து போராடுவோம். சட்டபடியான நமது உரிமைகளை அடைவோம்.
கடலூர் மாவட்ட பைலட், மற்றும் இஎம்டியை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு
12.07.2011 அன்று மாலை 7 மணியளவில் கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை ஆம்புலன்ஸ் விழுப்புரம் எல்லையில் நடந்த விபத்தில் அடிபட்டவர்களை காப்பாற்றுவதர்க்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆனத்தூர் என்ற இடத்திற்கு சென்று விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி முதலுதவி சிகிச்சை அளிக்க முயற்சி செய்த போது அங்குள்ள 8 பேர்கள் ஆம்புலன்ஸில் ஏறினார்கள்.
Tuesday, 12 July 2011
சங்கம் அமைப்பது நமது அரசியலைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமை
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கமாக செயல்படவும் , அதில் உறுப்பினர்களாக சேரவும் நமது அரசியலைப்பு சட்டம் சரத்து 19 நமக்கு உரிமைகளை வழங்கியுள்ளது .
19. Protection of certain rights regarding freedom of speech etc
(1) All citizens shall have the right
(a) to freedom of speech and expression;
(b) to assemble peaceably and without arms;
(c) to form associations or unions;
(f) omitted
(g) to practise any profession, or to carry on any occupation, trade or business
Sunday, 10 July 2011
தினத்தந்தி செய்தி : 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்கவேண்டும் - தொழிற்சங்கங்கள் கோரிக்கை
மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பில் இணைத்துள்ள தமிழக தொழிலாளர் தலைவர்கள் 9 பேர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் , பைலட்கள் , இஎம்டி , மற்றும் கால் சென்டர் ஊழியர்கள் உள்பட பல்வேறு பணியிடங்களில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள், இந்த திட்டத்தை அரசே ஏற்று நடத்தி அதன் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். ஊதிய உயர்வு , பணியில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தக்க இழப்பீடு , சர்வீஸ் தொடர்ச்சியுடன் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
நன்றி : தினத்தந்தி நாள் : 10 .07 .2011 சென்னை பதிப்பு.
பக்கம் : 12
Subscribe to:
Posts (Atom)