(108AWU)Reg.No.1508/MDU, Affiliated with: CENTRAL ORGANISATION OF INDIAN TRADE UNIONS- COITU
Friday, 29 July 2011
Thursday, 28 July 2011
திருச்சி மாவட்ட தொழிலாளர்களை மிரட்டும் இ.எம்.ஆர்.ஐ. நிர்வாகம்
திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் நமது சங்கத்தின் சார்பில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அவ்வாறு மனு அளித்தவர்களை இஎம்ஆர்ஐ நிர்வாகம் வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் ,வெவ்வேறு இடங்களுக்கு மாற்றுவதாக மிரட்டி வருகிறது. இங்கு சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறதா என்று சந்தேகமாக உள்ளது. அந்தளவிற்கு தொழிலாளர்களை நிர்வாகம் வாட்டி வதைக்கிறது.
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் திருச்சி மாவட்ட ஜி.வி.கே. நிர்வாகத்திற்கு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் திருச்சி மாவட்ட ஜி.வி.கே. நிர்வாகத்திற்கு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.
Wednesday, 27 July 2011
விழுப்புரம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை மிரட்டும் விழுப்புரம் டி. ம். மற்றும் பிளிட் - ஐ கண்டிக்கிறோம் .
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஊழியர்கள் கடந்த 18 .07 .2011 அன்று மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு அளித்தனர். அன்று பத்திரிக்கைகளுக்கும் கூட்டாக பேட்டி அளித்தனர். அவர்கள் மனு அளித்த விவரம் அடுத்த நாள் பத்திரிக்கைகளிலும், 27 .07 .2011 தேதியிட்ட தமிழாக அரசியல் வார இதழிலும் வெளிவந்தது. விழுப்புரம் மாவட்ட டி. ம் . மற்றும் பிளிட் இருவரும் விழுப்புரம் மாவட்ட 108 தொழிலாளர்களை பேட்டி அளித்ததற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று எழுதி தருமாறு மிரட்டுகின்றனர். ஒரு ஜனநாயக நாட்டில் தங்கள் படும் கஷ்டங்களை வெளிப்படையாக சொல்லக்கூட உரிமை இல்லையா என்பது இங்கு மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. ஊழியர்களை மிரட்டும் டி.ம். மற்றும் , பிளிட் இருவருக்கும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
Monday, 25 July 2011
சேலம் , பெரம்பலூர், திருப்பூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் அலையலையாக மாவட்டம் தோறும் ஓன்று திரண்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஐந்தாவது கட்டமாக சேலம் , பெரம்பலூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் 25.07.2011 , அன்று மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர்.
Friday, 22 July 2011
நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மனு அளித்தனர்.
மனு அளிக்கும் போராட்டத்தின் நான்காவது கட்டமாக 22 .07 .2011 வெள்ளிகிழமை அன்று நாமக்கல் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்து தங்கள் பதிமூன்று அம்ச கோரிக்கையை வழியுறுத்தி மனு அளித்தனர். மாவட்ட ஆட்சி தலைவர் தொழிலாளர் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்தார் ஏற்கனவே 20 மாவட்டகளை சேர்ந்த தொழிலாளர்கள் மனு அளித்துள்ளனர். நமது தொடர் போராட்டத்தில் நாமக்கல் மாவட்டமும் இணைந்துள்ளது
Monday, 18 July 2011
108 ஆம்புலன்ஸ் சங்க உறுப்பினர் விண்ணப்ப படிவத்தை எடுத்து சென்ற டி.எம். மீது புகார் அளிப்பு
நமது சங்கத்தில் உறுப்பினராக சேருவதற்கு முதுகுளத்தூர் பைலட் விண்ணப்ப படிவத்தை தான் தங்கும் அறையில் வைத்திருந்தார்.
முதுகுளத்தூர் வந்த ராமநாதபுரம் டி.எம். பால் ராபின்சன், 15 .07.2011 அத்துமீறி பைலட்டின் அறையில் நுழைந்து விண்ணப்ப படிவத்தையும் எடுத்து சென்றார். அவர் மீது கிரிவியஸ் செல்லில் புகார் அளிக்கப்பட்டது. அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் நமது சங்கத்தின் சார்ப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரினை விசாரித்த காவல் ஆய்வாளர் ராமநாதபுரம் டி.எம். பால் ராபின்சனை விசாரணைக்கு அழைத்துள்ளார்.
13 மாவட்டங்களை சேர்ந்த 108 ஊழியர்கள் மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் மனு அளித்தனர்
18 .07 .2011 திங்கள் கிழமை மனுகொடுக்கும் போராட்டத்தின் மூன்றாவது கட்டமாக திருநெல்வேலி , ராமநாதபுரம், சிவகங்கை , திண்டுக்கல், கரூர்,திருச்சி ,ஈரோடு, உதகமண்டலம், அரியலூர், தஞ்சாவூர், நாகபட்டினம் , விழுப்புரம், கிருஷ்ணகிரி,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் இன்று அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் தங்களது 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனு அளித்தனர். திருச்சி மாவட்ட ஒ.இ. மற்றும் , டி.எம் .ஆகிய இருவரும் அந்த மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் செல்லக்கூடாது என்று பலவாறாக மிரட்டல் விடுத்தனர். ஆனாலும் மிரட்டலுக்கும், பசப்பு வார்த்தைகளுக்கும் பயம் கொள்ளாமல் அனைவரும் மனு அளிக்க கலந்து கொண்டனர். இந்த மூன்றாடண்டு காலமாக ஜி.வி.கே. நிறுவனம் அதில் பணி புரியும் ஊழியர்களை ஈவிரக்கமின்றி சுரண்டி வருகிறது. மிக குறைந்த ஊதியம், தொழிலாளர் சட்ட விரோதமாக 12 மணி நேரம் வேலை, என்று நாகரீக சமுதாயம் ஏற்றுக்கொள்ளவே இயலாத அளவிற்கு பல கொடுமைகளை இந்த நிறுவனம் தொழிலார்களுக்கு இளைத்து வருகிறது.
Subscribe to:
Posts (Atom)
