நமது சங்கத்தின் சட்ட ஆலோசகரும் , வழக்கறிஞருமான தோழர் த. சிவக்குமார் அவர்கள் மாணவர்களும் , சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் விதமாக 1 . தீங்கியல் சட்டம் , 2 . சட்ட மொழி ,3 . வழக்கறிஞர் தொழில் நெறிமுறைகள் ,4 . இலவச சட்ட உதவி மற்றும் பொது நல வழக்காடுதல் , 5 . தொழிலாளர் மற்றும் தொழிற்சட்டங்கள், 6 . வரிவிதிப்பும் வரிச்சட்டங்களும் ஆகிய நூல்களை தமிழில் எழுதியுள்ளார் . தொடர்ந்து நல்ல தமிழில் சட்ட நூல்களை வெளியிட்டும் வருகிறார். அவரது எழுத்து பணியினை பாராட்டி 'சட்ட கதிர் மாத இதழ்' இந்தாண்டிற்கான சிறந்த தமிழ் சட்ட நூலுக்கான விருதினை அவருக்கு வழங்குகிறது. இந்த விருதினை 09 .09.2012 அன்று ராணி சீதை ஹாலில் 9.30 மணிக்கு உச்ச நீதிமன்ற , உயர்நீதிமன்ற மற்றும் மத்திய ,மாநில அமைச்சர்கள் பங்கு பெரும் நிகழ்ச்சியில் பெற இருக்கிறார். அவருக்கு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
(108AWU)Reg.No.1508/MDU, Affiliated with: CENTRAL ORGANISATION OF INDIAN TRADE UNIONS- COITU
Saturday, 8 September 2012
Saturday, 1 September 2012
கொலைகார, குரோனி முதலாளித்துவ நிர்வாகங்களின் ஒருங்கிணைப்பாக விளங்கி 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் உழைக்கும் வர்க்கத்திற்கு விடுத்துள்ள சவாலை எதிர் கொள்வோம்
மாமேதை லெனின் ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலில் ஏகபோகங்கள் உருவாவதைப் பற்றி விரிவாக எழுதினார். குறிப்பாக டிரஸ்ட்கள் மற்றும் கார்டல்கள் என்ற ஏகபோக நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை விரிவாக விளக்கினார். எவ்வாறு ஒரே தொழிலைச் செய்யும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஏகபோகங்கள் உருவாயின என்பதை அந்நூலில் அவர் விளக்கினார்.
ஆனால் நவீன முதலாளித்துவம் அதனைத் தாண்டித் தற்போது பல மடங்கு சென்றுள்ளது. ஒரே தொழிலைச் செய்யும் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஏகபோகங்கள் உருவாகும் போக்கையெல்லாம் தாண்டி லாபம் கிடைக்கும் அனைத்துத் தொழில்களிலும் சேவைகளிலும் மூலதன வலுக் கொண்ட நிறுவனங்கள் முதலீடு செய்து அத்தொழில்களை நடத்துகின்றன. இதில் குறிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியது ஒப்பந்தத் தொழிலிலும் பெரும் பெரும் ஒப்பந்தத் தொழிலாளர் நிறுவனங்களை ஏற்படுத்தி பல ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்கள் நுழைந்துள்ளன.
Saturday, 28 July 2012
தேனி மாவட்டத்தில் ஜே.டி. ஆய்வு! ஓடுவதற்கு தகுதி இல்லாத கம்பம் வண்டியை சரிசெய்ய உத்தரவு
தேனி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்(108AWU) சங்கம் சார்பாக ஆம்புலன்ஸ் வண்டிகள் சரிவர பரமரிக்கப்படுவதில்லை என்று மனு அளிக்கப்படிருந்தது. அதனை அடுத்து ஜே.டி. நேரில் ஆய்வு மேற்கொண்டார், அப்போது 4 டயர்களும் தேய்ந்து போய் ஓடுவதற்கு தகுதியே இல்லாமல் இருந்த கம்பம் வண்டியை அந்த வண்டி சரிசெய்யும் வரை ஓட்டக்கூடாது என்று உத்தரவிட்டார். அதனை அடுத்து அந்த வண்டி நிர்வாகத்தால் சரி செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆம்புலன்சிற்கும் 30 லட்சம் வரை ஆண்டுக்கு பராமரிப்பு செலவு ஆகிறது என்று கணக்கு எழுதும் ஜி.வி.கே. ஆம்புலன்ஸ் வண்டிகளில் டயர்களைக் கூட மாற்றுவதில்லை என்பது தான் நடைமுறை உண்மை. இதை அரசின் கவனத்திற்கு அனைத்து வழிகளில் நமது சங்கம் கொண்டு சென்று தான் இருக்கிறது.
Sunday, 22 July 2012
பணிநீக்கம் செய்யப்பட்ட பயிற்சி பெற்ற பணியாளர்களை திரும்பவும் வேலைக்கு எடுத்து கொள்ள வேண்டும்
108 ஆம்புலன்ஸ் திட்டம் தற்போது விரிவு படுத்தப்பட்டு அரசு மருத்துவ மனைகளில் உள்ள இலவச ஆம்புலன்ஸ் களும் இந்த திட்டத்தில் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 450 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. புதிதாக 150 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. அந்த வண்டிகளை இயக்க ஆள்கள் தெரிவு நடைபெற்று வருகிறது. பணியாளர்களுக்கு 12 மணி நேர வேலை குறைவான சம்பளம் என்று இருப்பதால் இந்த பணிக்கு சேர யாரும் ஆர்வம் காட்டவில்லை.
Saturday, 21 July 2012
சம்பளம் குறைவாக இருப்பதால் ‘108’ ஓட்ட டிரைவர் கிடைக்கவில்லை - தினகரன் நாளிதழ்
போதிய ஆட்கள் கிடைக்காததால் ‘108’ சேவைக்கு கூடுதலாக வாங்கப்பட்டுள்ள புதிய வாகனங்களை இணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு அவசர மருத்துவ உதவிகளை அளிக்கும் வகை யில் 108 சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவை யில் தமிழகத்தில் மொத்தம் 470 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. தமிழக அரசும், ஜி.வி.கே இஎம்ஆர்ஐ நிறுவனமும் இணைந்து இந்த சேவையை அளித்து வருகின்றன. இதை விரிவுபடுத்தும் வகையில் புதிதாக 150 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றை 108 சேவையில் இணைக்கும் நிகழ்ச்சி 19ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் விழா திடீரென ரத்து செய்யப்பட்டது.
Friday, 20 July 2012
இழப்பீடு வழங்க கோரி மதுரை ஆட்சியரிடம் கோரிக்கை
மதுரை ஆட்சியரிடம் வாகனங்கள் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை என்று வைத்த கோரிக்கையை அடுத்து அனைத்து வாகனங்களிலும் என்னென்ன பழுது உள்ளது என்று அறிய ஒரு கமிட்டி போட்டு ஆய்வு செய்து அவ்வாறு உள்ள குறைபாடுகளை இருபது நாள்களுக்குள் நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ஆனால் ஜி.வி.கே. நிர்வாகம் இந்த பழுதுகளை நீக்க இன்று வரை ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆட்சியரின் உத்தரவை காற்றில் பறக்க விட்டது. கொட்டாம்பட்டி 108 ஆம்புலன்ஸ் விபத்திற்கு பிரேக் சரிவர இல்லாததே காரணம் என்று சொல்லப்படுகிறது.
குவியும் குற்றச்சாட்டு ... குளறுபடியில் 108 !
அவசர காலத்தில் உயிரைக் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையே கொஞ்சம் கொஞ்சமாக மரணப் படுக்கைக்குப் போகும் நிலையை என்னவென்று சொல்வது ? என்ன பிரச்னை?
Subscribe to:
Posts (Atom)