Tuesday, 21 January 2014

வெற்றிகரமாக நடைபெற்றது 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் வேலைநிறுத்த வாபஸ் குறித்த விளக்க கூட்டம்

கடந்த 09/01/2013,அன்று திருச்சியில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற வேலைநிறுத்த வாபஸ் குறித்த விளக்க கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
மாநில தலைவர் தோழர் வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர்கள் தோழர் சிவகுமார் மற்றும் பால்கண்ணன்,பொதுசெயலாளர் தோழர் செந்தில், மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.




Thursday, 9 January 2014

நமது போராட்ட செய்திகளை மக்களிடம் சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி

நமது வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி

நமது வேலை நிறுத்த போராட்டத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த அனைத்து சங்கங்களுக்கும் நாம் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். தோழர்கள் நமக்கு ஆதரவு தெரிவித்த சங்கங்களின் முகவரிகளை தலைமைக்கு அனுப்பும் படி கேட்டுக்கொள்கிறோம். 

Wednesday, 8 January 2014

'108' employees call off strike for now as mgmt agrees to some demands

In a major relief to the state government, the management and employees of the 108 ambulance service arrived at a shaky truce following talks held in the presence of labour department officials in Chennai on Wednesday evening. The employees subsequently called off the strike that was to begin across the state on Wednesday night.

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க விளக்கக் கூட்டம்


நடைபெறும் இடம் :

ஸ்ரீ சண்முகா திருமண மஹால் , திருச்சி அரசு  பொது மருத்துவமனை அருகில் , உறையூர் சாலை, திருச்சி

நாள் : 09.01.2014, நேரம் : காலை 11 மணியளவில்

அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். 

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி! பொதுமக்கள் கோரிக்கைக்கு இணங்க ஸ்ட்ரைக் வாபஸ்

இன்று தொழிலாளர் உதவி ஆணையர் (தலைமையிடம்) திரு ஆர். ரவிசந்திரன் முன்னிலையில்  நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 
 நிர்வாகத்திற்கும் , 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட  ஒப்பந்தத்தின்படி  நமது தரப்பின் 4 முக்கிய கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.

 1. மாறுதல் கொள்கை,
 2. விபத்து செலவுகளுக்கு உடனடியாக Rs . 4000/- வழங்குதல் , 
3. தொழிற்சங்க நடவடிக்கைக்காக பழிவாங்கப்பட்ட பால்கண்ணன், திவாகருக்கு திரும்ப வேலை வழங்க ஒப்புக்கொண்டது ,  செல்வம் தேனிக்கு இட மாற்றம் செய்யப்படுவார். 
4.பெண் ஊழியர்களுக்கு  12 வாரங்கள் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது.  

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி


108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி 
தொழிலாளர் உதவி ஆணையாளர் முன்னிலையில் நிர்வாகத்திற்கும் , 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் நமது தரப்பின் 4 கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.