இன்று தொழிலாளர் உதவி ஆணையர் (தலைமையிடம்) திரு ஆர். ரவிசந்திரன் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்
நிர்வாகத்திற்கும் , 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி நமது தரப்பின் 4 முக்கிய கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.
1. மாறுதல் கொள்கை,
2. விபத்து செலவுகளுக்கு உடனடியாக Rs . 4000/- வழங்குதல் ,
3. தொழிற்சங்க நடவடிக்கைக்காக பழிவாங்கப்பட்ட பால்கண்ணன், திவாகருக்கு திரும்ப வேலை வழங்க ஒப்புக்கொண்டது , செல்வம் தேனிக்கு இட மாற்றம் செய்யப்படுவார்.
4.பெண் ஊழியர்களுக்கு 12 வாரங்கள் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதை அடுத்து நமது 24 மணி நேர வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
குறிப்பாக பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு இணங்கவே நமது போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
நமக்கு ஆதரவு அளித்த அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் , சமூக ஆர்வலர்களுக்கும், COITU விற்கும், பொதுமக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாளை காலை 11 மணியளவில் திருச்சியில் நமது விளக்க கூட்டம் நடைபெற இருக்கிறது. அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நமக்காக இரவு பகல் பாராமல் உழைத்த வழிநடத்திய தோழர். த.சிவகுமார், தோழர். ஆ.ஆனந்தன் , தோழர். வரதராஜ் ஆகியோருக்கு நமது நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
No comments:
Post a Comment