Thursday, 30 June 2011

நாகர்கோவில் - 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை நிர்வாகத்தை அரசே ஏற்கக்கோரி ஆட்சியரிடம் மனு.

..ம்ம்என்றால்பணியிடமாற்றம்ஏன் என்றால்   பணிநீக்கம்   என்று  பலருக்கும்   அவசர காலத்தில் உதவி செய்து  உயிர் கொடுக்கும்    108 ஆம்புலன்ஸ்  தொழிலாளர்கள் 12  மணிநேரத்திற்கு  மேல்  வேலை  , குறைந்த ஊதியம் , சொந்த  மாவட்டத்தில்  பணியில்  அமர்த்தாது , மற்றும்  பணிபளுவின் கொடுமை  தாளாமல்  இன்று 30 .06 .2011 ,    தங்களுக்கு மேலதிகாரிகளால் இழைக்கப்படும் துன்பங்களை நீக்கக்கோரியும்பணிநிரந்தரம், ,மருத்துவ காப்பீடுசம்பள உயர்வு ,மற்றும்   தொழிலாளர் நலச்சட்டத்தை மதிக்காமல் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியத்தை அளித்து கொள்ளை லாபம் அடித்து வரும்  ஜி வி கே -  விடம் இருந்து .எம்.ஆர். 108  ஆம்புலன்ஸ் நிர்வாகத்தை அரசே ஏற்று  நடத்த கோரியும்,  மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சி தலைவர் 108  ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு உறுதி அளித்தார்.


Monday, 13 June 2011

இ எம் ஆர் ஐ 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்


                108  ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் 
(இது சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ் (COITU ) யோடு இணைக்கப்பட்டது)
அமைப்பு கமிட்டி சார்ப்பாக

கன்னியாகுமரியில் இருந்து  சென்னை வரை ‘அவசர உதவி’ என்றால் 108  என்று ஆக்கியது நமது உழைப்பு தான். பலருக்கு அவசர காலத்தில் உயிர் கொடுத்த நம்முடைய கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட வேண்டுமென்றால் சங்கமாக அணிதிரண்டு , பல போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமே சாத்தியமாகும். நமது சக தொழிலாளி பணியில் இருந்து நீக்கப்படுகிறார் என்பதை நாம் தட்டி கேட்காமல் இருந்தால் நாளை நாம் பணியில் இருந்து நீக்கப்படுவோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நிர்வாகத்திற்கு தகவல் சொல்லி ஒட்டுவேலை பார்ப்பதால் நிர்வாகம் உங்களுக்கு சலுகைகள் காட்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்கள் என்றால் அது தான் மிகப்பெரிய முட்டாள் தனமாக இருக்கும். நிர்வாகம் உங்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தி கொண்டு தூக்கி எறிந்துவிடும். ஆத்தோடு சக தொழிலாளியின் வாழ்க்கையை கெடுத்தவர் என்ற மிகப்பெரிய குற்ற உணர்வும் உண்டாகும். நமது பலமே நம்மிடம் உள்ள ஒற்றுமைதான் என்பதை நாம் திரும்ப திரும்ப நினைவில் கொள்வோம். நமது ஒற்றுமையின் மூலமே நமக்கான கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்.
இந்த சங்கத்தின் முன்னுள்ள அடிப்படையான கோரிக்கைகள்.

EMRI 108 Ambulance Workers Union