Friday, 29 July 2011

108-ன் ஊழியர்கள் சோகம் - நக்கீரன்


தமிழகம் முழுவதும் பரபரப்பாக செயல்பட்டுவரும், தமிழக அரசின் 108 அவசர உதவி வாகனத்தில் பணியற்றும் ஊழியர்களுக்கு அவசர உதவி தேவைப்படுவதாக சொல்லி சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூசனத்திடம் மனு கொடுத்துவிட்டு வந்தார்கள் 108 ஆம்புலன்சை ஓட்டும் பைலட்டுகள்.

Thursday, 28 July 2011

திருச்சி மாவட்ட தொழிலாளர்களை மிரட்டும் இ.எம்.ஆர்.ஐ. நிர்வாகம்

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் நமது சங்கத்தின் சார்பில் 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அவ்வாறு மனு அளித்தவர்களை இஎம்ஆர்ஐ  நிர்வாகம் வரும் ஆகஸ்ட் 1  ம் தேதி முதல் ,வெவ்வேறு  இடங்களுக்கு மாற்றுவதாக மிரட்டி வருகிறது. இங்கு சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறதா என்று சந்தேகமாக உள்ளது. அந்தளவிற்கு தொழிலாளர்களை  நிர்வாகம் வாட்டி வதைக்கிறது.
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் திருச்சி மாவட்ட ஜி.வி.கே. நிர்வாகத்திற்கு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.

Wednesday, 27 July 2011

விழுப்புரம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை மிரட்டும் விழுப்புரம் டி. ம். மற்றும் பிளிட் - ஐ கண்டிக்கிறோம் .

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஊழியர்கள் கடந்த 18 .07 .2011 அன்று மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு அளித்தனர். அன்று பத்திரிக்கைகளுக்கும் கூட்டாக பேட்டி அளித்தனர். அவர்கள் மனு அளித்த விவரம் அடுத்த நாள் பத்திரிக்கைகளிலும், 27 .07 .2011 தேதியிட்ட தமிழாக அரசியல் வார இதழிலும் வெளிவந்தது. விழுப்புரம் மாவட்ட டி. ம் . மற்றும் பிளிட் இருவரும் விழுப்புரம் மாவட்ட 108 தொழிலாளர்களை பேட்டி அளித்ததற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று எழுதி தருமாறு மிரட்டுகின்றனர். ஒரு ஜனநாயக நாட்டில் தங்கள் படும் கஷ்டங்களை வெளிப்படையாக சொல்லக்கூட உரிமை இல்லையா என்பது இங்கு மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. ஊழியர்களை மிரட்டும் டி.ம். மற்றும் , பிளிட் இருவருக்கும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

Monday, 25 July 2011

சேலம் , பெரம்பலூர், திருப்பூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் அலையலையாக மாவட்டம் தோறும் ஓன்று திரண்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஐந்தாவது கட்டமாக சேலம் , பெரம்பலூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் 25.07.2011 , அன்று மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர்.  

Friday, 22 July 2011

நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மனு அளித்தனர்.

மனு அளிக்கும் போராட்டத்தின் நான்காவது கட்டமாக 22 .07 .2011 வெள்ளிகிழமை அன்று நாமக்கல் மாவட்ட  108  ஆம்புலன்ஸ்  தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் நாமக்கல்  மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்து தங்கள் பதிமூன்று அம்ச கோரிக்கையை வழியுறுத்தி மனு அளித்தனர். மாவட்ட ஆட்சி தலைவர் தொழிலாளர் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்தார் ஏற்கனவே 20  மாவட்டகளை சேர்ந்த தொழிலாளர்கள் மனு அளித்துள்ளனர். நமது தொடர் போராட்டத்தில் நாமக்கல் மாவட்டமும்  இணைந்துள்ளது

Monday, 18 July 2011

108 ஆம்புலன்ஸ் சங்க உறுப்பினர் விண்ணப்ப படிவத்தை எடுத்து சென்ற டி.எம். மீது புகார் அளிப்பு

நமது சங்கத்தில் உறுப்பினராக சேருவதற்கு முதுகுளத்தூர் பைலட் விண்ணப்ப படிவத்தை தான் தங்கும் அறையில் வைத்திருந்தார்.
முதுகுளத்தூர்  வந்த ராமநாதபுரம் டி.எம். பால் ராபின்சன், 15 .07.2011 அத்துமீறி பைலட்டின் அறையில் நுழைந்து விண்ணப்ப படிவத்தையும் எடுத்து சென்றார். அவர் மீது கிரிவியஸ் செல்லில் புகார் அளிக்கப்பட்டது. அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் நமது சங்கத்தின் சார்ப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரினை விசாரித்த காவல் ஆய்வாளர் ராமநாதபுரம் டி.எம். பால் ராபின்சனை விசாரணைக்கு அழைத்துள்ளார்.

13 மாவட்டங்களை சேர்ந்த 108 ஊழியர்கள் மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் மனு அளித்தனர்

18 .07 .2011 திங்கள் கிழமை மனுகொடுக்கும் போராட்டத்தின் மூன்றாவது கட்டமாக திருநெல்வேலி , ராமநாதபுரம், சிவகங்கை , திண்டுக்கல், கரூர்,திருச்சி ,ஈரோடு, உதகமண்டலம், அரியலூர், தஞ்சாவூர், நாகபட்டினம் , விழுப்புரம், கிருஷ்ணகிரி,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் இன்று அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் தங்களது 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனு அளித்தனர். திருச்சி மாவட்ட .. மற்றும் , டி.எம் .ஆகிய இருவரும் அந்த மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் செல்லக்கூடாது என்று பலவாறாக மிரட்டல் விடுத்தனர். ஆனாலும் மிரட்டலுக்கும், பசப்பு வார்த்தைகளுக்கும் பயம் கொள்ளாமல் அனைவரும் மனு அளிக்க கலந்து கொண்டனர். இந்த மூன்றாடண்டு காலமாக ஜி.வி.கே. நிறுவனம் அதில் பணி புரியும் ஊழியர்களை ஈவிரக்கமின்றி சுரண்டி வருகிறது. மிக குறைந்த ஊதியம், தொழிலாளர் சட்ட விரோதமாக 12 மணி நேரம் வேலை, என்று நாகரீக சமுதாயம் ஏற்றுக்கொள்ளவே இயலாத அளவிற்கு பல கொடுமைகளை இந்த நிறுவனம் தொழிலார்களுக்கு இளைத்து வருகிறது.

தினமலர்: உயிர் காக்கும் 108 ஐ காப்பாற்ற அரசு நடவடிக்கை தேவை.

ஊழியர்கள் பற்றாக்குறையால் 108 ஆம்புலன்ஸ் திட்டம் முடங்கும் அபாயத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும், தி.மு.., ஆட்சிக் காலத்தில் ,உயிர் காக்கும் உன்னத சேவை திட்டத்தின் கீழ் , 108   அம்புலன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் , அதிநவீன வசதிகள் கொண்ட கருவிகளுடனும், 500க்கும் மேற்பட்ட இலவச ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. 

Sunday, 17 July 2011

தகவல் உரிமை சட்டபடி கோரிப்பெற்ற இஎம்ஆர்ஐ பற்றிய தகவல்கள்

1 . ஊழியர்களுக்கு அரசின் வரன்முறை ஊதியமா ? தொகுப்பு ஊதியமா?
 
பதில் : அரசின் வரன்முறை ஊதியம் இல்லை, தொகுப்பு ஊதியம் இல்லை .
 
2.ஓவர் டைம் பணிபளுவிற்கு ஒ.டி. சம்பளம் வழங்கப்படுகிறதா?
 
பதில்: மாற்று விடுப்பு எடுத்துக்   கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் 
3. 108  ஆம்புலன்ஸ் திட்டத்தை நடத்துகிற EMRI பதிவு செய்யப்பட்டிருப்பது டிரஸ்டா   ?
 
பதில் : சொசைட்டி ஆக்டின்படி பதிவு செய்யப்பட்டிருக்கிறது .

Wednesday, 13 July 2011

The movement of 108 ambulance workers

The movement of 108 ambulance workers to submit petition to the district collectors in Tamilnadu,  in reply collector warns not to take any action against the workers those who given petition...
EMRI 108 ambulance workers (affiliated to COITU) those who are in shifts hoisted the movement of submitting petition to the district collectors of Madurai, Theni, Virudhunagar, Coimbatore, Cuddalore and Dharmapuri. The collectors received the petition and handled the claims of the petition direct under themselves without posting it to the appropriate departments. Especially the collectors of Virudhunagar and Coimbatore warned the administrations should not retaliate against the workers who have given the petition which was quite confident to the workers in the other district. The workers haven’t given petition in the rest of the district has planned to do the same in the following days.

கோவை: முத்தரப்பு பேச்சுவார்த்தை தொழிலாளர்களின் கோரிக்கைக்கு 15 நாள் கெடு

13.07.2011,கோவையில்   தாசில்தார், அர்.எம்., ஜேடி,மற்றும் 
நமது 108  ஆம்புலன்ஸ்   சங்க  தொழிலாளர்கள் 
பேச்சுவார்த்தை  நடைபெற்றது. கூட்டத்தில் நிறுவனம் தொழிலாளர்களுக்கு இழைத்துவரும் பல்வேறு இன்னல்களை நமது சங்கத்தினர் எடுத்துவைத்தனர். அத்தோடு தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் பி.எப். மற்றும் இஎஸ்ஐ, முறையாக   செலுத்தப்படுவதில்லை,சட்டப்படி  8  மணி நேரம்  வேலை நேரமாக்கப்பட வேண்டும், கூடுதல் நேரத்திற்கு ஒடி  தருதல்  தொழிலாளர்களுக்கு  சொந்த ஊரில் வேலை என்ற பல்வேறு கோரிக்கைகைகளை வைத்தனர். தாசில்தார் தொழிலாளர்கள் கேட்பது அனைத்துமே  நியாயமான கோரிக்கைகள் என்று கூறினார். நிர்வாகம் இன்னும் 15 நாளில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளது. தொடர்ந்து போராடுவோம். சட்டபடியான நமது உரிமைகளை அடைவோம்.

கடலூர் மாவட்ட பைலட், மற்றும் இஎம்டியை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு

12.07.2011 அன்று மாலை மணியளவில்  கடலூர்  மாவட்டம் புதுப்பேட்டை  ஆம்புலன்ஸ் விழுப்புரம் எல்லையில் நடந்த விபத்தில் அடிபட்டவர்களை காப்பாற்றுவதர்க்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆனத்தூர் என்ற இடத்திற்கு சென்று விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி முதலுதவி சிகிச்சை அளிக்க முயற்சி செய்த போது அங்குள்ள பேர்கள் ஆம்புலன்ஸில் ஏறினார்கள்.

Tuesday, 12 July 2011

சங்கம் அமைப்பது நமது அரசியலைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமை


108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கமாக செயல்படவும் , அதில் உறுப்பினர்களாக சேரவும் நமது அரசியலைப்பு சட்டம் சரத்து 19 நமக்கு உரிமைகளை வழங்கியுள்ளது .
19. Protection of certain rights regarding freedom of speech etc
(1) All citizens shall have the right
(a) to freedom of speech and expression;
(b) to assemble peaceably and without arms;
(c) to form associations or unions;
(d) to move freely throughout the territory of India;
(e) to reside and settle in any part of the territory of India; and
(f) omitted
(g) to practise any profession, or to carry on any occupation, trade or business

Monday, 11 July 2011

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் மனுக் கொடுக்கும் இயக்கம்: மனுக் கொடுத்த தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பு

இ.எம்.ஆர்.ஐ. 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (இணைப்பு சி.ஓ.ஐ.டி.யு.) சார்பாக தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியாளர்களிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கும் இயக்கம் உற்சாகத்துடன் இன்று தொடங்கியது. மதுரை, தேனி, விருதுநகர், கோயமுத்தூர், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் சிப்டில் இல்லாத தொழிலாளர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் குறை தீர்க்கும் நாளாகிய இன்று மனுக்கள் வழங்கினர்.

Sunday, 10 July 2011

தினத்தந்தி செய்தி : 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்கவேண்டும் - தொழிற்சங்கங்கள் கோரிக்கை

மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பில் இணைத்துள்ள தமிழக தொழிலாளர் தலைவர்கள் 9 பேர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் , பைலட்கள் , இஎம்டி , மற்றும் கால் சென்டர் ஊழியர்கள் உள்பட பல்வேறு பணியிடங்களில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள், இந்த திட்டத்தை அரசே ஏற்று நடத்தி அதன் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். ஊதிய உயர்வு , பணியில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தக்க இழப்பீடு , சர்வீஸ் தொடர்ச்சியுடன் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

நன்றி : தினத்தந்தி நாள் : 10 .07 .2011  சென்னை பதிப்பு.
பக்கம் : 12

Saturday, 9 July 2011

Job insecurity hits 108 ambulance drivers, nurses


It seems the nursing staff and drivers serving in the ambulances introduced under Arogya Kavacha 108 scheme, who strive hard to save the lives of others, do not enjoy a secured job themselves. 

Karnataka State Arogya Kavacha 108 Employees Union has alleged that, as many as 18 workers, had been dismissed from the service in the past 20 days for taking part in the State-level convention of the union organised in Shimoga on May 12.

The Arogya Kavacha 108 ambulance service introduced under National Rural Health Mission (NRHM) is managed by GVK Emergency Management and Research Institute in the State. The combined strength of drivers called as pilots and nursing staff called as emergency medical technicians in the State exceeds 2,000.

Friday, 8 July 2011

एम्बुलेंस संघ 108 ई. एमआरआई श्रमिक



(के साथ संबद्ध भारतीय ट्रेड यूनियनों के सीटू के केन्द्रीय संगठन:)

Thursday, 7 July 2011

GREAT SUCCESS FOR THE 108 AMBULANCE WORKERS STRIKE IN NAGERCOIL

The Workers of 108 Ambulance from Nagercoil filed a petition against the autocratic approach of their district management to the collector of Kanyakumari District. By dismissing a 108 ambulance Worker named Babu, the management took their revenge against the Workers. On account of this incident all the Workers of 108 Ambulance from Nagercoil waged a collective struggle against the management in the pursuit of District Collector on 04/07/2011.

108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு அறைகூவல்

108 மருத்துவ உதவித் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு பிரபலமான திட்டம். நோய் நொடியினால் அல்லலுற்று நொந்து நூலாகி அரசு மருத்துவமனைகளின் அலைக்கழிப்புப் போக்கினால் அல்லாடி நிற்கும் மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றை உருவாக்கிய திட்டம். நாமும் மனிதர்களே நவீன மருத்துவம் பெறுவதற்கு நமக்கும் உரிமை உண்டு என்ற மக்களின் நம்பிக்கையைப் பெற வாய்ப்புள்ள திட்டமாக இது இருப்பதால் இத்திட்டத்தை எளிதில் அரசு கைவிடாது” .ஓட்டுனர் உரிமம் போன்ற விசேசத் தகுதிகள் பெற்ற பலர் இதில் வேலைக்குச் சேர விரும்பியதற்கு உந்து சக்தியாக இருந்தது மேற்கூறிய இத்திட்டம் குறித்த புரிதலே.

மேலும் படிக்க

Tuesday, 5 July 2011

நாகர் கோவில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி !

நாகர்கோவில் 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சி தலைவரிடம் நிர்வாக அதிகாரிகளின்  தான்தோன்றித்தனமான செயல்பாடுகளை தடுக்க கோரி மனு அளித்தனர் ஆனால் நிர்வாகமோ பாபு என்ற தொழிலாளியை பணிநீக்கம் செய்தது. நியாயமாக மனு அளித்தவரின் மீது நடவடிக்கை எடுத்த நிர்வாகத்தை கண்டித்து 04 .07 .2011 அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் மாவட்ட ஆட்சியரிடம் சென்று பாபுவை பணிக்கு சேர்த்து கொள்ளவேண்டும் என்று போராடினர். 

நாகர்கோவில் : ஜி.வி.கே. 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் அடக்குமுறை

கன்னியாகுமரி மாவட்ட 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள், நிர்வாகத்தின் காட்டுமிராண்டிதனமான  அடக்குமுறையை  கண்டித்தும் , முறைகேடாக செயல்பட்டு அரசின் பணத்தை மோசடி செய்யும் கன்னியாகுமரி மாவட்ட 108 இன் செயல் அலுவலர் சரவணன் , வாகன பராமரிப்பாளர் சீனிவாசன் , மண்டலமேலாளர் மாசிலாமணி ஆகியோர் மனித தன்மையே சிறிதும் இல்லாமல் 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மீது கடும் அடக்குமுறையை ஏவி விடுகின்றனர். இவ்வாறு அரசின் பணத்தில் கொட்டமடிக்கும் இந்த அதிகாரிகளிடம் இருந்து மாற்றி  மாவட்ட சுகாதார துறையின் கீழ் 108 ஆம்புலன்ஸ்  இன் நிர்வாகத்தை கொண்டுவரும்படியும், மேலும்...