Friday, 9 September 2011

108 ஆம்புலன்ஸ் சேவையை அரசு ஏற்க உண்ணாவிரதம்(மதுரை ) -தினமலர்

தனியார் பராமரிப்பில் உள்ள "108' ஆம்புலன்ஸ் சேவையை அரசு ஏற்க வலியுறுத்தி, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்ட ஊழியர்கள், நேற்று மதுரை காளவாசலில் உண்ணாவிரதம் இருந்தனர்.
மாநில அமைப்பு செயலாளர் ஆனந்தஜெயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் , தலைவர் , மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அரசு சம்பளம், சலுகைகள் வழங்க வேண்டும். கன்னியாகுமரியில் 14 ஊழியர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதிகாரிகள் தன்னிச்சையாக, உள்நோக்கத்துடன் கூடிய உத்தரவுகளை வழங்கக்கூடாது. 15 மணி நேர வேலையை 8 மணி நேரமாக மாற்ற வேண்டும். கூடுதல் நேரம் பணி செய்தால், அதற்குரிய சம்பளத்தை வழங்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களில் பணியாற்றினால் இரண்டு நாள் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். சில ஊழியர்கள், ஆம்புலன்சில் பணிபுரிந்தவாறு உண்ணாவிரதம் இருந்தனர். 


ஊழியர்கள் உண்ணாவிரதம் 108 ஆம்புலன்ஸ் சேவை அரசே ஏற்று நடத்தணும் (திருச்சி) - தினமலர்

"108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும்' என 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திருச்சியில் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். தமிழக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த "108 ஆம்புலன்ஸ்' ஊழியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை அருகே நடந்த இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில், "108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் பெறும் விகிதத்தில் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிகப் பணிநீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும். தன்னிச்சையாக பழிவாங்கும் நோக்குடன் இடமாற்ற உத்தரவுகள் வழங்குவதையும் உள்நோக்குடன் குற்றச்சாட்டுகள் குறிப்பாணைகள் வழங்கும் போக்கினையும் கைவிட வேண்டும். 8 மணி நேரத்துக்கு அதிகமாக செய்யும் வேலைக்கு "ஓவர்டைம்' ஊதியம் வழங்க வேண்டும்' என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

108 சேவை: அரசே ஏற்கக் கோரிக்கை( சேலம்) - தினமணி

108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் வியாழக்கிழமை தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.108 ஆம்புலன்ல் தொழிலாளர் சங்கம் சார்பில்நடைபெற்ற இப்போராட்டத்தில், சங்கத்தின் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். தன்னிச்சையாக வேலை நீக்கம் செய்யப்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

‘108' ambulance service employees observe fast(Cuddalore) - The Hindu

Employees of ‘108' ambulance service observed fast in front of the Collectorate here on Thursday, urging the State government to take over the service.
Three sections of employees, including call centre operators, medical technicians and drivers, who formed part of the service, participated in it.
“Services not affected”
District president of the 108 Ambulance Employees' Union told The Hindu that even though they were on fast they saw to it that the services were not affected for the day.
Only those who were “off duty” took part in the hunger strike and therefore, the services were operated as usual.

'108' ambulance staff for regularisation of services(Madurai) - The Hindu

Employees affiliated to the ‘108' Ambulance Service Association observed a dawn-to-dusk fast here on Thursday demanding the State government to take over the utility service and absorb them as government servants.
The members observed the fast at Kalavasal in the city. The members urged the government to intervene and regularise their services. Their other demands include provision of overtime wages as it was mandatory that any employee working beyond eight hours must be given overtime wages. They demanded that the suspended staff members in Kanyakumari district should be taken back for work without any condition as they were allegedly punished with vendetta. 

Thursday, 8 September 2011

108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே நடத்த வேண்டும்.பாளையில் ஊழியர்கள் உண்ணாவிரதம் nellaionline.net

108  ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 8  அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையம் கோட்டையில் ஊழியர்கள் உண்ணா விரத போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

பாளை ஜவகர் மைதானத்தில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களைச் சேர்ந்து 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

 மேலும் படிக்க
nellaionline.net

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் மதுரை , திருநெல்வேலி, திருச்சி, கடலூர், சேலம் ஆகிய இடங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது.

108 ஆம்புலன்ஸ் சேவையை ஏற்று நடத்தவும்  , அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் பெறும் விகிதத்தில் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும் என்று   அரசிடம்   கோரிக்கைகளை வைத்தும் , கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிகப் பணிநீக்க உத்தரவினை திரும்பப் பெறுதல், தன்னிச்சையாகப் பழிவாங்கும்  நோக்குடன் இடமாற்ற உத்தரவுகள் வழங்குவதையும் உள்நோக்குடன் குற்றச்சாட்டுக் குறிப்பாணைகள் வழங்கும் போக்கினையும்  கைவிடுதல், 8 மணிநேரத்திற்கு அதிகமாகச் செய்யும் வேலைக்கு ஓவர்டைம் ஊதியம் வழங்குதல், அரசு விடுமுறை நாட்களில் வேலை செய்பவர்களுக்கு இரட்டைச் சம்பளமோ அல்லது மாற்று விடுப்போ வழங்குதல், தன்னிச்சையாகக் கடந்த காலங்களில் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளரைப் பணித்தொடர்ச்சியுடன் மீண்டும் வேலைக்கு எடுத்தல், வாகனத்தைத் தூய்மையாகவும் உரியமுறையிலும் பராமரிப்பதற்கும், ஊழியர்கள் ஓய்வு நேரத்தில் தங்கவும் உரிய ஏற்பாடுகள் செய்தல். போன்ற கோரிக்கைகளை வழியுறுத்தி 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்ப்பாக தமிழகம் முழுவதும் 25  க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் திருச்சி, மதுரை , திருநெல்வேலி, கடலூர், சேலம் ஆகிய மாவட்ட தலைநகரங்களில் இன்று( 8 .9 .2011 ) காலை 10 மணி முதல் மாலை 5  மணி  உண்ணாவிரதம் நடைபெற்றது.