Sunday 30 November 2014

"108 ஆம்புலன்ஸ்' வாகன ஊழியர்கள் போராட்டம்--சென்னை வள்ளுவர் கோட்டம்

ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பராமரிக்க வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தமிழ்நாடு
ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பராமரிக்க வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தமிழ்நாடு "108 ஆம்புலன்ஸ்' ஊழியர்கள் சங்கத்தினர். 
தமிழகத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தக்க பராமரிப்பு இல்லாத காரணத்தால் ஊழியர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை என்று கூறி, "108 ஆம்புலன்ஸ்' ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பராமரிக்க வேண்டும் என்று கூறி தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் சென்னையில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இது குறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் பால் கண்ணன் கூறியது:
தமிழ்நாட்டில் மொத்தம் 646 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளன. பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக இப்போது 620 வாகனங்கள் மட்டுமே செயல்படுகின்றன. 

தீபாவளி சமயத்தில் ஊக்கத்தொகை கேட்டு ஊழியர்கள் போராடியதைத் தொடர்ந்து எங்களுக்கு ரூ. 4,800 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஊக்கத்தொகை வழங்கியதால் வாகனங்களைப் பராமரிக்க நிதியில்லை என்று நிர்வாகத்தினர் கூறிவிட்டனர். பராமரிப்பில்லாத காரணத்தால் மாவட்டத்துக்கு 5 முதல் 7 வாகனங்கள் பழுதாகி செயல்படாமல் நிற்கின்றன. இதனால் மற்ற ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வேலைப்பளு அதிகமாகி உள்ளது. பொதுமக்களுக்கான சேவையும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

பராமரிப்பில்லாத வாகனங்களைக் கொண்டு ஆபத்தில் இருப்பவர்களை மருத்துவமனையில் விரைவாகக் கொண்டு சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.இதனால் சில சமயங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களே விபத்துக்குள்ளாகின்றன. 

அவ்வாறு, விபத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கினால் அவற்றில் பணியாற்றும் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். விபத்தில் இருந்து தப்பினால் எங்களது வேலை பறிபோகும். இந்த நிலையில்தான் பணியாற்றி வருகிறோம் என்றார் அவர்.
http://www.dinamani.com
http://www.dinamalar.com/news_detail.asp?id=1125293

2 comments: