Friday 23 December 2011

உயிரை கொடுத்து உழைக்கும் தொழிலாளர்களை பாடாய் படுத்தும் ஜி.வி.கே.


தேசிய நெடுஞ்சலைகள் திறக்கப்பட்ட பின்பு வாகனங்கள்  கட்டுப்பாடு  இல்லாமல் வேகாமாக  பயணிக்கின்றன. வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகளும் அதிகமாகி விட்டன. விபத்துகளில் அடிபட்டவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை  அளிக்கப்படுமானால் அவர்களின் பொன்னான உயிர்கள் காக்கப்படும். அந்த அரும்பணியில் மலையிலும், வெயிலினிலும் , கடும் குளிரிலும் கடமை தவறாமல் பணிபுரிபவர்கள் நமது 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள். அவர்களுக்கு வழங்கப்படுவது மிக குறைந்த ஊதியமாக இருந்தாலும் அவர்கள் தங்கள் பணியினை தொடர்வதற்கு சிறப்பு காரணம் என்னவென்றால் அவர்கள் செய்யும் உயிர் காக்கும் பணி தரும் நிறைவு தான். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இவ்வாறு மிகுந்த கடமை உணர்வோடும், சிரத்தையோடும், தங்களது கடுமையான உழைப்பை செலுத்தி நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் உழைக்கின்றனர். அந்த பலன்களை அறுவடை செய்யும் இந்திய அரசியல் அமைப்பை மதிக்காமல் செயல்பட்டு வரும் ஜி.வி.கே என்ற ஆந்திர நிறுவனத்திற்கு மனசாட்சி என்பது ஒரு துளியும் கிடையாது. 

தாங்கள் கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக எச்.ஆர். , ஆர்.ஒ., டி.எம்., மற்றும் ஒ.இ ., பிளிட் என்ற பதவிகளை உருவாக்கி அதில் சிறிதும் கருணை என்பதே இல்லாதவர்களாய் பொறுக்கி எடுத்து அந்த பதவிகளுக்கு ஜி.வி.கே. நியமனம் செய்துள்ளது.  இந்த ஒட்டுமொத்த குழுவின் பணியே தொழிலாளர்களை ஓன்று சேரவிடாமல் தடுப்பதும் , அவர்கள் மீது கட்டுப்பாடு இல்லாமல் ஏவிவிடப்படும் சுரண்டலை நிறைவேற்றுவதும் தான். அவசர ஊர்தி சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 8 மணிநேர வேலை நேரம் , சொந்த ஊரில் பணி , பஸ் பாஸ், ஒழுங்கான வாகன பராமரிப்பு ,  ஊழல் அற்ற நிர்வாகம் என்ற அடிப்படை கோரிக்கைகள் கூட இது வரை நிர்வாகத்தால் நிறைவேற்றி தரப்படுவதில்லை. 

இதனால் தான் ஜி.வி.கே. செய்துள்ள முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தொழிலாளர் சட்டங்களை மதிக்காத ஜி.வி.கே விடம் அரசு செய்துள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு அரசே இந்த நல்ல சேவையை ஏற்று நடத்துவது ஓன்று தான் இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு ஆகும்.   மாண்பு மிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு 108 ஆம்புலன்சை அரசே ஏற்று நடத்த ஆவன செய்ய வேண்டும். 

No comments:

Post a Comment