Wednesday 18 September 2013

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் கோரிக்கை : பேச்சு வார்த்தை 4ம் தேதி தள்ளிவைப்பு

அவசர கால, 108 ஆம்புலன்ஸ் சேவை தொழிலாளர்கள் கோரிக்கைக்கான பேச்சுவார்த்தை, அடுத்த மாதம், 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அவசரகால உதவிக்கான,"108' ஆம்புலன்ஸ் திட்டம், அமலில் உள்ளது. இதை, இ.எம்.ஆர். ஐ., என்ற நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும், 600க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில், 2,500 பேர் பணியாற்றுகின்றனர். 



இந்த நிலையில், பணி நேரத்தை, எட்டு மணி நேரமாக வரைமுறை செய்ய வேண்டும்; கூடுதல் நேரத்திற்கு, கூடுதல் சம்பளம் தர வேண்டும்; முறையான இட மாறுதல் கொள்கை உருவாக்க வேண்டும் என, தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதை நிர்வாகம் ஏற்காததால், இந்த பிரச்னை, தொழிலாளர் நலத்துறைக்குச் சென்றது. பல கட்ட விசாரணை நடந்த நிலையில், நேற்று (18ம்தேதி) இணை ஆணையர் பாஸ்கர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவன முக்கிய அதிகாரிகள் வரவில்லை. வர முடியாததற்கான காரணம் குறித்து கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, பேச்சுவார்த்தை, அடுத்தமாதம், 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.




"பேச்சுவார்த்தை இழுத்தடிக்கப்படும் பட்சத்தில், வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதைத் தவிர வேறு வழியில்லை' என, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=807087

No comments:

Post a Comment