Wednesday, 28 September 2011

Ambulance service workers protest against harassment

Indefinite strike by Arogya Raksha Kavacha 108 staff called off



At a standstill: Arogya Raksha Kavacha (108) ambulances parked in front of Deputy Commissioner's office in Chitradurga on Saturday.
Chitradurga: “We are relentlessly working to save the lives of people, but now our lives are not secure,” said Kavita, an emergency medical technician (EMT) with the Arogya Raksha Kavacha ‘108' ambulance service.
She was part of the Statewide strike called by members of the Karnataka State Arogya Raksha Kavacha 108 Workers' Association.

Monday, 19 September 2011

‘108' contract employees take to the streets


The employees of the ‘108' emergency services staged a novel demonstration here on Thursday as part of their ongoing strike to press for their nine-point charter of demands including payment of regular wages in compliance with GO 3.
The protesters arrived at the Collectorate in a rally and staged a demonstration in front of the district administration office highlighting their plight.
Later, addressing the agitating employees at a relay hunger strike camp, representatives of the ‘108' Emergency Services Contract Employees' Association alleged that the government deprived them of regular wages despite their valuable emergency health care services. They deplored that they were rendering emergency services under unfavourable work conditions.
The leaders demanded that the government should immediately intervene and concede their legitimate demands such as implementation of eight-hour work rule and social security measures. 

Friday, 16 September 2011

கடலூர் மாவட்ட ஊழியர்களை பந்தாடும் ஜி.வி.கே.

அமைதியான முறையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக 108  ஆம்புலன்ஸ்  ஊழியர்கள் கடந்த 8  ம் தேதி அன்று    உண்ணாவிரதப் போராட்டத்தை கடலூரில் நடத்தினார்கள். இது வரை 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் நடத்திய போராட்டங்களில் நிர்வாகத்தின் எந்தவிதமான பணிகளும் பாதிக்காமல் தான் போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறது. ஆந்திராவில் நடைபெற்று வரும் காலவரையற்ற வேலைநிறுத்தம் போன்று  இல்லாமல்   108  சேவைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் தான் சங்கம் போராடி வருகிறது.

ஆந்திராவில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம், ஊர்வலம், தர்ணா

ஜி.வி.கே.நிறுவனம் இந்திய முழுவதும் தனது லாபவேட்டைக்காக தொழிலாளர்களை கொடுமைப்படுத்தி சுரண்டி வந்தது. இந்திய முழுவதும் உள்ள தொழிலாளர்கள் இந்த கொடுமைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில மாநிலங்களில் ஜி.வி.கே. விரட்டி அடிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆந்திராவில் ஜி.வி.கே வின் கொடுஞ்சுரண்டலில் இருந்து விடுதலை பெறவும், இந்த திட்டத்தை அரசே ஏற்று நடத்த கோரியும் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதம், தர்ணா, ஊர்வலம்,வேலைநிறுத்தம் என்று பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு விதமான போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் வெல்ல வேண்டும் , அனைத்து மாநிலங்களிலும் அரசே இந்த திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் சங்கம் கேட்டு கொள்கிறது . 

ஆந்திராவில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம், ஊர்வலம், தர்ணா

ஜி.வி.கே.நிறுவனம் இந்திய முழுவதும் தனது லாபவேட்டைக்காக தொழிலாளர்களை கொடுமைப்படுத்தி சுரண்டி வந்தது. இந்திய முழுவதும் உள்ள தொழிலாளர்கள் இந்த கொடுமைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில மாநிலங்களில் ஜி.வி.கே. விரட்டி அடிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆந்திராவில் ஜி.வி.கே வின் கொடுஞ்சுரண்டலில் இருந்து விடுதலை பெறவும், இந்த திட்டத்தை அரசே ஏற்று நடத்த கோரியும் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள்(108AWU) ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதம், தர்ணா, ஊர்வலம்,வேலைநிறுத்தம் என்று பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு விதமான போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் வெல்ல வேண்டும் , அனைத்து மாநிலங்களிலும் அரசே இந்த திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் சங்கம் கேட்டு கொள்கிறது . 

108 service stops in Krishna dt.


The entire fleet of 39 EMRI 108 ambulances in Krishna district came to a halt with the emergency medical technicians (EMTs) and pilots (drivers) going on strike on Wednesday.
The agitation of the Emergency Management and Research Institute (EMRI) staff, demanding the State government to take over the ambulance service, which began on Tuesday with a few ambulances not being operated, intensified on Wednesday with all the vehicles stopping their services. The agitating staff brought the vehicles to the Rotary-Red Cross Blood Bank and left them there.

108 ambulance staff stages dharna


Services of ‘108 Ambulances' were affected in Sri Potti Sriramulu Nellore district with employees resorting to strike for the past few days. The staff, led by AITUC, staged a dharna in front of the Collector's office on Wednesday, urging to consider their demands.

Wednesday, 14 September 2011

'108' employees strike work - andhra pradesh


Several '108' ambulances remained off the roads in Hyderabad and Ranga Reddy district on Monday with drivers and emergency medicine technicians demanding that the government takeover the service.
The employees who sat on an indefinite strike at Indira Park claimed that they were getting irregular salaries over the last two months. While sources said that serious efforts were on to resolve the crisis, spokesperson of GVK-EMRI, the private partner who runs the service, claimed that all was well.

Friday, 9 September 2011

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் - செந்தில் இ.எம்.டி. விபத்திற்கு உள்ளானார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் வேலை செய்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த எஸ்.செந்தில் என்ற இ.எம்.டி. 7 .9 .2011 அன்று மதியம் 3 மணியளவில் எதிர்பாராதவிதமாக விபத்திற்கு உள்ளானார். அவர் கோவை கங்கா மருத்துவமணையில் அனுமதிக்கபட்டுள்ளார். தீவிர  சிகிட்சை பிரிவில் அவர் சிகிச்சை எடுத்து வருகிறார். 

EMRI ambulance workers want services to be taken over by Government(Salem) - The Hindu



Workers of ERMI 108 Ambulances and members of Tamil Nadu Government 108 Ambulance Workers Union resorted to one day token fast highlighting various demands here on Thursday.
The workers said that they had not been regularised for long. The private management, which runs the ambulance service, was not providing adequate wages to the workers.

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்(108AWU) இதுவரை..........

108  ஆம்புலன்ஸ் சங்கம் 108  ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்க கோரி சேவையில் எந்த விதமான தொய்வும் ஏற்படாதவாறும், அதே சமயம் அரசின் கவனத்திற்கு இதை கொண்டுசெல்லவும்   பலகட்டமாக போராட்டங்களை நடத்தி வருகிறது . நாளிதழ்களில் வந்த செய்திகளின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

பாளை.,யில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரதம் (திருநெல்வேலி ) - தினமலர்

திருநெல்வேலி :பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பாளை.,யில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே நடத்த வேண்டும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு இணையாக சம்பளம் மற்றும் சலுகை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் பாளை., ஜவகர் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர் மகிழ்ச்சி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் வரதராஜன் உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

108 ஆம்புலன்ஸ் சேவையை அரசு ஏற்க உண்ணாவிரதம்(மதுரை ) -தினமலர்

தனியார் பராமரிப்பில் உள்ள "108' ஆம்புலன்ஸ் சேவையை அரசு ஏற்க வலியுறுத்தி, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்ட ஊழியர்கள், நேற்று மதுரை காளவாசலில் உண்ணாவிரதம் இருந்தனர்.
மாநில அமைப்பு செயலாளர் ஆனந்தஜெயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் , தலைவர் , மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அரசு சம்பளம், சலுகைகள் வழங்க வேண்டும். கன்னியாகுமரியில் 14 ஊழியர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதிகாரிகள் தன்னிச்சையாக, உள்நோக்கத்துடன் கூடிய உத்தரவுகளை வழங்கக்கூடாது. 15 மணி நேர வேலையை 8 மணி நேரமாக மாற்ற வேண்டும். கூடுதல் நேரம் பணி செய்தால், அதற்குரிய சம்பளத்தை வழங்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களில் பணியாற்றினால் இரண்டு நாள் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். சில ஊழியர்கள், ஆம்புலன்சில் பணிபுரிந்தவாறு உண்ணாவிரதம் இருந்தனர். 


ஊழியர்கள் உண்ணாவிரதம் 108 ஆம்புலன்ஸ் சேவை அரசே ஏற்று நடத்தணும் (திருச்சி) - தினமலர்

"108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும்' என 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திருச்சியில் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். தமிழக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த "108 ஆம்புலன்ஸ்' ஊழியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை அருகே நடந்த இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில், "108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் பெறும் விகிதத்தில் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிகப் பணிநீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும். தன்னிச்சையாக பழிவாங்கும் நோக்குடன் இடமாற்ற உத்தரவுகள் வழங்குவதையும் உள்நோக்குடன் குற்றச்சாட்டுகள் குறிப்பாணைகள் வழங்கும் போக்கினையும் கைவிட வேண்டும். 8 மணி நேரத்துக்கு அதிகமாக செய்யும் வேலைக்கு "ஓவர்டைம்' ஊதியம் வழங்க வேண்டும்' என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

108 சேவை: அரசே ஏற்கக் கோரிக்கை( சேலம்) - தினமணி

108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் வியாழக்கிழமை தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.108 ஆம்புலன்ல் தொழிலாளர் சங்கம் சார்பில்நடைபெற்ற இப்போராட்டத்தில், சங்கத்தின் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். தன்னிச்சையாக வேலை நீக்கம் செய்யப்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

‘108' ambulance service employees observe fast(Cuddalore) - The Hindu

Employees of ‘108' ambulance service observed fast in front of the Collectorate here on Thursday, urging the State government to take over the service.
Three sections of employees, including call centre operators, medical technicians and drivers, who formed part of the service, participated in it.
“Services not affected”
District president of the 108 Ambulance Employees' Union told The Hindu that even though they were on fast they saw to it that the services were not affected for the day.
Only those who were “off duty” took part in the hunger strike and therefore, the services were operated as usual.

'108' ambulance staff for regularisation of services(Madurai) - The Hindu

Employees affiliated to the ‘108' Ambulance Service Association observed a dawn-to-dusk fast here on Thursday demanding the State government to take over the utility service and absorb them as government servants.
The members observed the fast at Kalavasal in the city. The members urged the government to intervene and regularise their services. Their other demands include provision of overtime wages as it was mandatory that any employee working beyond eight hours must be given overtime wages. They demanded that the suspended staff members in Kanyakumari district should be taken back for work without any condition as they were allegedly punished with vendetta. 

Thursday, 8 September 2011

108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே நடத்த வேண்டும்.பாளையில் ஊழியர்கள் உண்ணாவிரதம் nellaionline.net

108  ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 8  அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையம் கோட்டையில் ஊழியர்கள் உண்ணா விரத போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

பாளை ஜவகர் மைதானத்தில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களைச் சேர்ந்து 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

 மேலும் படிக்க
nellaionline.net

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் மதுரை , திருநெல்வேலி, திருச்சி, கடலூர், சேலம் ஆகிய இடங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது.

108 ஆம்புலன்ஸ் சேவையை ஏற்று நடத்தவும்  , அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் பெறும் விகிதத்தில் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும் என்று   அரசிடம்   கோரிக்கைகளை வைத்தும் , கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிகப் பணிநீக்க உத்தரவினை திரும்பப் பெறுதல், தன்னிச்சையாகப் பழிவாங்கும்  நோக்குடன் இடமாற்ற உத்தரவுகள் வழங்குவதையும் உள்நோக்குடன் குற்றச்சாட்டுக் குறிப்பாணைகள் வழங்கும் போக்கினையும்  கைவிடுதல், 8 மணிநேரத்திற்கு அதிகமாகச் செய்யும் வேலைக்கு ஓவர்டைம் ஊதியம் வழங்குதல், அரசு விடுமுறை நாட்களில் வேலை செய்பவர்களுக்கு இரட்டைச் சம்பளமோ அல்லது மாற்று விடுப்போ வழங்குதல், தன்னிச்சையாகக் கடந்த காலங்களில் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளரைப் பணித்தொடர்ச்சியுடன் மீண்டும் வேலைக்கு எடுத்தல், வாகனத்தைத் தூய்மையாகவும் உரியமுறையிலும் பராமரிப்பதற்கும், ஊழியர்கள் ஓய்வு நேரத்தில் தங்கவும் உரிய ஏற்பாடுகள் செய்தல். போன்ற கோரிக்கைகளை வழியுறுத்தி 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்ப்பாக தமிழகம் முழுவதும் 25  க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் திருச்சி, மதுரை , திருநெல்வேலி, கடலூர், சேலம் ஆகிய மாவட்ட தலைநகரங்களில் இன்று( 8 .9 .2011 ) காலை 10 மணி முதல் மாலை 5  மணி  உண்ணாவிரதம் நடைபெற்றது.

அல்லல்படும் "108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

12 மணி நேர பணிச்சுமை, பணியிட மாற்றம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறுகின்றனர்.தமிழ்நாடு அரசு மற்றும் ஜி.வி.கே. எமர்ஜென்ஸி மேனேஜ்மென்ட் அன்ட் ரிசர்ச்  நிறுவனத்தின் கூட்டு முயற்சியுடன் 2008-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சுமார் 385 ஆம்புலன்ஸ்கள் செயல்படுகின்றன.ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு பைலட் (டிரைவர்) ஒருவரும், எமர்ஜென்ஸி மெடிக்கல் டெக்னீஷியன் ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். டிரைவர்களுக்கு | 6,500; எமர்ஜென்ஸி மெடிக்கல் டெக்னீஷியனுக்கு | 7,500 என்ற நிலையில் மாத ஊதியம் வழங்கப்படுகிறது. 

108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்தக் கோரி மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம்

108 ஆம்புலன்ஸ் மருத்துவ சேவைத் திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு பிரபலமான திட்டமாகும். கல்வி, பொதுமருத்துவம் போன்றவை ஒரு மக்கள் நல அரசின் அதிமுக்கிய பணிகளாகும். அதில் பொதுமருத்துவம் சார்ந்த இந்த ஆம்புலன்ஸ் சேவை அரசாங்கத்தால் நடத்தப்படுவதாகவே பெரும்பாலோர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த சேவை முழுமையாக அரசால் நடத்தப்படவில்லை. இந்த ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து அதனை ஜீ.வி.கே. என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து தமிழக அரசு  இந்த சேவையை நடத்துகிறது. அந்த நிறுவனம் இந்த சேவையில் பணிபுரியும் கால் சென்டர், மருத்துவ தொழில் நுட்பம், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆகிய மூன்று பிரிவினைச் சேர்ந்தவர்களுக்கும் எவ்வளவு குறைந்த ஊதியம் கொடுத்து வேலை வாங்க முடியுமோ அவ்வளவு குறைந்த ஊதியத்தினை வழங்கி வேலை வாங்குகிறது.

Tuesday, 6 September 2011

இவர்களெல்லாம் மனிதர்கள் தானா ? அதிகார மமதையில் ஆடும் ஜி.வி.கே.வின் எச்.ஆர். , டி.எம்.ஒ.இ, மற்றும் பிளிட்

இந்தியாவில் அரசின் அனைத்து நிறுவனங்களிலும் தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன. ரயில்வே , போக்குவரத்து , விமானம் என்று அனைத்து துறைகளிலும் சங்கங்களோடு அரசு முறைபடி பேச்சுவார்த்தை நடத்துகிறது. நியாயமான கோரிக்கைகளை ஏற்கின்றன.இவை அனைத்தும் சுமூகமாக நடைபெறுகிறது. ஆனால் ஜி.வி.கே.நிர்வாகம் என்னவோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போலவும் , இவர்களுக்கு தொழிற்சங்க சட்டங்கள் பொருந்தாதது போலவும் நடந்து கொள்கிறார்கள் .108  ஆம்புலன்ஸ் திட்டத்தில் பத்து பைசா கூட முதலீடு இல்லாமல் இடைத்தரகராக இருந்து கொண்டு ஆந்திர கம்பனி ஜி.வி.கே. லாபத்தை அள்ளி குவிக்கிறது. அரசிடமிருந்து அதிக அளவில் பணம் பெற்று கொண்டு தொழிலாளர்களுக்கு மிகக்குறைவான ஊதியத்தை அளித்து விட்டு , மக்களுக்கும்  நல்ல சேவை சென்று அடையாமல் தனது அதீத லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஜி.வி.கே.நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. 

Monday, 5 September 2011

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் அடிப்படை கோரிக்கைகளை ஜி.வி.கே. , நிர்வாகத்திடம் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளார் சங்கம்(108 AWU ) சமர்பித்துள்ளது.

நாகர்கோவிலில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை திரும்ப பணிக்கு சேர்க்க கோருதல் , மற்ற மாவட்டங்களில் துவங்கியுள்ள   ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையை நிறுத்த கோருதல், 8  மணிநேர வேலை ,  முறையான சம்பள உயர்வு,  சொந்த ஊரில் வேலை, முறையான வாகன பராமரிப்பு , முறையான மருத்துவ காப்பீடு , பி.எப். முறையாக பிடித்தம் செய்து முறையாக பி.எப் செலுத்துவது  , ஒ.இ., டி.எம்., அர்.எம்., எச்.ஆர்.  ஆகியோர் தொழிலாளர்களை சட்டவிரோதமாக  கொடுமைப்படுத்த  கூடாது , மற்றும் இன்னும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி  இஎம்அர்ஐ , ஜி.வி.கே. வின் சி.ஒ.ஒ.(C.O.O)  சென்னை, மதுரை, கோவை, ஆர்.எம்.(R.Ms) , அனைத்து மாவட்டங்களிலும் உள்ள  டி.எம்.,(D.Ms) சுகாதார துறை அமைச்சர் , சுகாதார   துறை திட்ட அலுவலர் , தொழிலாளர் துறை  அலுவலர்கள் ஆகியோருக்கு முறைபடி 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்ப்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது . 

Saturday, 3 September 2011

கேபிள் டி.வி.யை அரசே ஏற்றது போல 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

 கலாநிதி மாறனின் சுமங்கலி கேபிள் விசன் மட்டுமே அனைத்து கேபிள் டி.வி.களையும் தனது அதிகாரம் , பணபலம் ஆகியவற்றின் துணை கொண்டு தமிழக மக்களை பகல்  கொள்ளை அடித்து வந்தனர். மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் பதவிக்கு வந்தவுடன் கேபிள் டி.வியில் தனியார் சர்வாதிகாரத்தை ஒடுக்கி , அரசே அதை ஏற்று நடத்தி  மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் டி.வி. கிடைக்கும்படி செய்துள்ளார்.

ஆந்திர அரசு, 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் இருந்து ஜி.வி.கே.வை விரட்ட தயாராகி வருகிறது.

ஜி.வி.கே. நிர்வாகம் தான் இந்திய அரசையே தலைமை தாங்கி நடத்துவது போல தனது ஊழியர்களை காட்டுமிரண்டிதனமாக மிரட்டி வேலை வாங்கி வந்தது.108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை  சகட்டு மேனிக்கு பணிநீக்கம் செய்தல் , ஊழல் செய்தல் , வாகனத்தை சரியாக பராமரிக்காமல் இருப்பது, போலி கணக்கு எழுதுவது, கால் சென்டரில் காலிபணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது, தொழிலாளர் சட்டங்களை மதிக்காமல் செயல்படுவது என்று இந்திய அரசின் அரசியலமைப்புக்கு விரோதமாக அனைத்தையும் செய்து வந்தது. அரசிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி ஏழைமக்களுக்கு உரிய சேவை சென்றைடையாமல் மக்கள் பணத்தை ஏப்பம் விட்டு வந்தது. 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களின் காரணமாக ஜி.வி.கேவின் முகத்திரை தமிழகத்தில் மட்டுமல்ல ஆந்திராவிலும் கிழிக்கப்பட்டு விட்டது. தற்போது ஆந்திர அரசு ஜி.வி.கே.வின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி நிதி ஒதுக்கிட்டை முடக்கியுள்ளது.

AP CM to decide in GVK EMRI services soon


The Andhra Pradesh Chief Minister, Mr.N.Kiran Kumar Reddy, is likely to finalise a decision on the issue of continuation of the GVK Group, the private partner engaged in implementing the 108 ambulance service through Emergency Management Research Institute (EMRI).
Following a review meeting the Chief Minister had with officials of the Health Ministry, it was decided to take appropriate decision, which could either mean continuation of GVK to manage the project or invite fresh tenders to select another private company for its management.