By நாமக்கல்,
First Published : 28 December 2013 05:27 AM IST
தொழிலாளர் நலச் சட்ட சலுகைகளை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு முறையாக அமல்படுத்தக் கோரி, அந்தத் தொழிலாளர்கள் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் (சிஓஐடியூ) சார்பில், வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
கோவை மண்டல செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். மாநிலத் தலைவர் வரதராஜன் சிறப்புரையாற்றினார்.
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை, அதிகப்படியான நேரத்துக்கு தனி ஊதியம், அகவிலைப்படி, போனஸ் போன்ற தொழிலாளர் நலச் சட்ட சலுகைகளை முறையாக அமல்படுத்திட வேண்டும்.
அரசு மருத்துவ உதவியாளர்கள், அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு இணையாக ஊதியம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் வழங்கிடவும், பணிமூப்பு அடிப்படையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட தொழிலாளர் சட்டத்தின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும் வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடைபெற்றது.
வருகிற ஜனவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ள ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை முன்னிட்டு,
மண்டல அளவில் தர்னா போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
நாமக்கல்லில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், ஈரோடு,
திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 12 மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பங்கேற்றனர்.
நன்றி தினமணி நாளிதழ்.
No comments:
Post a Comment