Thursday 6 October 2011

அரசு விடுமுறை தினத்திற்கு மாற்று விடுமுறை தரவேண்டும்

108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் வேலை செய்வதோடு தங்கள் உறவுகள் எல்லாம் பண்டிகையை கொண்டாடி கொண்டு இருக்கும்  அரசு விடுமுறை நாள்களிலும் வேலை செய்கிறார்கள். சட்டப்படி தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய விடுமுறையை கூட ஜி.வி.கே.தனது லாப வெறிக்கு இறையாக்குகிறது.தமிழக அரசு உடனடியாக தலையிட்டு அரசு விடுமுறை நாள்களுக்கு மாற்று விடுமுறையும் வேலை செய்யும் நாளுக்கு இரண்டு மடங்கு ஊதியமும் பெற்று தர ஆவன செய்ய வேண்டும்.

2 comments:

  1. Dear Unmindful Roomer monger,

    don't you understand that this organisation is a non profit, and each and every state government is doing stringent auditing. you first clarfify if you don't have faith in the audit mechanism of the government talk to government if you are that much dare enough.

    ReplyDelete
  2. நண்பரே, நாட்டு நடப்பு தெரிந்துதான் பேசுகிறீர்களா?
    போலிக் கணக்கு எழுதி பிரபலமான ஆடிட்டிங் கம்பெனிகளையும் அரசாங்கத்தையும் விலைக்கு வாங்கி உலகநாடுகளையே கதிகலங்க வைத்த சத்யம் ஆடிட்டிங் ஊழல் பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாதது போல் பேசுகிறீர்கள். உங்கள் ஆடிட்டிங், அரசாங்கத்தின் ஆடிட்டிங் எல்லாவற்றைப் பற்றியும் மக்கள் அறிவார்கள். சத்யம் வேறு ஜி.வி.கே வேறு என்று சட்டத்தை வேண்டுமானால் நம்பவைக்கலாம் மக்கள் நம்பமாட்டார்கள்.

    ஆந்திர அரசாங்கம் ஜி.வி.கேயுடன் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் இழுத்தடித்தபோது சொன்ன காரணம் இதுதான்: 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு என்று 3 மாதங்களுக்கு ஆகும் செலவுத் தொகையை முன்கூட்டியே அரசாங்கத்திடமிருந்து ஜி.வி.கே அட்வான்சாக வாங்கி அதை தன் சொந்த கடனுக்கு வட்டி கட்டுவதற்காகப் பயன்படுத்திவிட்டு ஆம்புலன்ஸ் வாகனங்களை சரியாகப் பராமரிப்பதில்லை என்பதே. நண்பரே நேர்மைத் துணிவிருந்தால் ஜி.வி.கே நிர்வாகத்திடம் கேட்டுப் பாருங்கள்.

    ReplyDelete