Wednesday 1 January 2014

"108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்

First Published : 04 October 2013 03:36 AM IST
நாமக்கல்லில் "108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள், நிர்வாகத்துக்கு எதிராகத் துண்டறிக்கை விநியோகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் "108'ஆம்புலன்ஸ் திட்டத்தில் 2800-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தத் திட்டத்தின்கீழ் ஒப்பந்தம் எடுத்து "108' ஆம்புலன்ûஸ இயக்கி வரும் நிறுவனம், தொழிலாளர் நலச் சட்டப்படி எவ்விதச் சலுகையும் அளிப்பதில்லை என்றக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து "108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நாமக்கல்லில் வியாழக்கிழமை துண்டறிக்கை விநியோகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு "108' ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில், பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் கோவை மண்டலச் செயலர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.
நாமக்கல் மாவட்டத் தலைவர் மகேஷ் முன்னிலை வகித்துப் பேசியது:
"108' ஆம்புலன்ஸ் திட்டத்தில் ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனம் தங்கள் ஊழியர்களை 12 மணி நேரத்துக்கும் மேலாகப் பணியாற்ற வற்புறுத்துகிறது. தொழிலாளர் நலச் சட்டத்தை மீறி கூடுதலாகச் செய்யப்படும் 4 மணி நேர வேலைக்கு எந்தவிதப் பணப் பயனும்
அளிக்கப்படுவதில்லை. ஊழியர்களுக்கு மாதம் ரூ.8000 மட்டுமே வழங்குகிறது. இதைத் தவிர வேறு எந்தப் பஞ்சப் படி, பயணப் படி உள்ளிட்ட சலுகைகள்
அளிக்கப்படுவதில்லை.
இதுகுறித்து கேள்வி எழுப்பும் தொழிலாளர்கள் நீண்ட தொலைவுக்கு பணியிட மாற்றம், ஊதியப் பிடிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு ஆளாகின்றனர்.
மேலும், இந்தத் திட்டத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் உயரதிகாரிகள் பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்குகளும் உள்ளன. ஆனால், அத்தகைய அதிகாரிகள் மீது நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேநேரம் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பணி வழங்கப்படாமலும் உள்ளது.
நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கைகள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்கவே இந்தத் துண்டறிக்கை விநியோகப் போராட்டம் நடத்தப்படுகிறது என்றார் அவர்.
நன்றி தினமணி நாளிதழ்..

No comments:

Post a Comment