Thursday 2 January 2014

திருவண்ணாமலையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்

பதிவு செய்த நாள் : Jan 01 | 02:16 am


திருவண்ணாமலையில் 8 மணிநேர வேலை, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தி னர்.
தர்ணாபோராட்டம்
108 ஆம்புலன்ஸ் டிரைவர் கள், மருத்துவ உதவியாளர் கள் சார்பில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி நேற்று சென்னை மண்டல அளவி லான தர்ணா போராட்டம் திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது.
தர்ணா போராட்டத்துக்கு மாநில அமைப்பு செயலாளர் சிவகுமார் தலைமை தாங்கி பேசினார். மாநில தலை வர் வரதராஜன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் ஆனந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினர்.
8 மணிநேர வேலை
ஒருநாளைக்கு 8 மணிநேரம் மட்டுமே வேலை வழங்க வேண்டும், அதற்குமேல் செய் யும் வேலைகளுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். அரசு ஆம்பு லன்ஸ் ஓட்டுனர்களுக்கு இணையான ஊதிய ம் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் களுக்கும், கிராம சுகாதார செவிலியர் களுக்கு இணை யான ஊதியம் மருத்துவ உதவியாளர்களுக்கும் வழங்க வேண் டும்.
அரசு விடுமுறை நாட்களில் வேலைசெய்தால் மாற்று விடுப்பு அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும், பெண் ஊழியர்களுக்கு 6 மாத காலம் சம்பளத்துடன்கூடிய பிரசவகால விடுப்பு வழங்க வேண்டும், சம்பளத்தில் 12 சத வீதம் வருடாந்திர போனசாக வழங்க வேண்டும். பணியின் போது மரணம் அடையும் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது.
நன்றி தினத்தந்தி நாளிதழ்.

No comments:

Post a Comment