Monday 1 August 2011

ஜி.வி.கே., இஎம்அர்ஐ எந்த நாட்டு சட்டத்தின் கீழ் இயங்குகிறது


எந்த ஒரு நிறுவனமும் , ஏன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில, மத்திய அரசும் கூட  நமது இந்திய அரசியலைப்பு சட்டப்படியே இயங்க வேண்டும். அப்படி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்காத அரசை , நிறுவனத்தை மூடுவதற்கு உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு. ஸ்டெரிலைட், மற்றும் கர்நாடகாவில் இயங்கிய சட்ட விரோதமான கனிமவளங்களை எடுக்கும் நிறுவனங்களை நீதிமன்றங்கள் மூடும்படி உத்தரவிட்டது. 

திருப்பூரில் நொய்யல் நதியில் சாய கழிவுகளை திறந்து விட்ட சாயப்பட்டறைகளும் நீதிமன்ற உத்தரவால்  மூடப்பட்டன.  ஆனால் இன்று மேற்கண்ட நிறுவனங்களை போன்றே ந்திராவை சேர்ந்த ஜி.வி.கே.நிறுவனமும் இந்தியாவில் இயற்றப்பட்ட எந்த சட்டங்களையும் மதிக்காமல் தான்தோன்றி தனமாக செயல்பட்டுக்கொண்டுள்ளது. உலகில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு தொழிலாளர்களை காட்டு தனமாக சுரண்டுகிறது. ஒரு கேசுக்கு ரூபாய். 1,500 /- க்கு மேலும் ஆண்டுக்கு ரூபாய். 250 கோடிக்கு மேலும் தமிழக அரசிடம் இருந்து பெரும் இந்த நிறுவனம் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி சம்பள உயர்வு தராமல் , தொழிலாளர் நல சட்டங்களையும் பின்பற்றாமல் , அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கடைபிடிக்கும்      ஊதிய      உயர்வையும் கடைப்பிடிக்காமல்        ( அதாவது பனி மூப்பு  அடிப்படையிலான ஊதிய உயர்வு ) தொழிலாளர்கள் மனம் நோவும் படி இஷ்டத்திற்கு ஒரு மாவட்டத்தில் நால்வருக்கு ரூ.1,000 /-க்கு மேலும், மற்றவர்களுக்கு ரூ.600/-லிருந்து, 900/- வரையிலுமான ஊதிய உயர்வினை அளித்துள்ளது. இது வரை யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு என்பது கூட தெரியாத அளவிற்கு அரியரையும்  சேர்த்து அளித்துள்ளது. அவசர ஆம்புலன்ஸ் சேவையில் செயல்படும் நிறுவனம் குறைந்தபட்சம் கடைப்பிடிக்கவேண்டிய தொழிலாளர் நல சட்டங்களையும்,  அரசின் வழிகாட்டுதல்களையும் கடைபிடிப்பதில்லை என்பது ஜனநாயக இந்தியா நாட்டில் வாழும் நமக்கெல்லாம் வெட்கக்கேடான செயலாகும்.

1 comment:

  1. இது தான் உண்மை

    ReplyDelete