Thursday 5 January 2012

தமிழக முதல்வரின் உத்தரவை ஏற்க மறுக்கும் ஜி.வி.கே.


வேலை பார்க்கும் மகளிருக்கு பேறுகால விடுப்பு மூன்று மாதத்தில் இருந்து ஆறுமாதமாக உயர்த்தும்படி மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் இந்த உத்தரவு அனைத்து அலுவலங்களிலும் நடை முறைப்படுத்தப்படுகிறது.  ஆனால் அரசியலமைப்பு சட்டத்தையே மதிக்காமல் லாபவெறி கொண்டு தொழிலாளர்களை சித்தரவதை செய்வதே தொழிலாக கொண்டு செயல்பட்டு வரும் ஜி.வி.கே நிறுவனம் முதல்வரின் இந்த உத்தரவை செயல்படுத்த மறுத்து வருகிறது.

 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் இ.எம்.டியாகவும்  மற்றும் கால் சென்டரிலும் பெருமளவு பெண் தொழிலாளர்கள் தனது குடும்ப பாரத்தையும் சுமந்து கொண்டு வெளியூரில் 12 மணிநேரம் கடுமையாக பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களை பெண்கள் என்று பாராமல் அவர்களுக்கு இரவு நேரப்பணியை தொழிலாளர் சட்டத்திற்கும், நீதிக்கும் விரோதமாக  நிர்வாகம் வழங்கி வருகிறது. பேறுகால மகளிருக்கு 6 மாத கால விடுப்பை தர நிர்வாகம் மறுத்து வருகிறது. அவ்வாறு பேறுகால விடுப்பில் செல்லும் தொழிலாளர்கள் அந்த விடுப்பு முடிந்து திரும்ப வேலைக்கு வரும் போது அவர்களின் தாய்மைக்கு மரியாதை தரமால் அவர்களுக்கு வேலை தர ஜி.வி.கே நிறுவனம் மறுத்து வருகிறது. இவ்வாறு தமிழக முதல்வரின் உத்தரவையே மதிக்காமல் செயல்பட்டு வரும் ஜி.வி.கே.வின் சட்டவிரோத போக்குகளுக்கு மாண்பு மிகு முதல்வர் அவர்கள் தான் முற்று புள்ளி வைக்க வேண்டும். 


2 comments:

  1. my dear comrade,

    you seem to be much interested in seeing this project into a great quagmire. if you really can do magics by making these people to follow your sangam, why cant you start an organisation and run it with all the demands fulfill... at least in one district.

    ReplyDelete
  2. http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=18009:-108-&catid=1413:2012&Itemid=663

    ReplyDelete