Saturday 27 July 2013

வேலை நிறுத்தம் "108' ஆம்புலன்ஸ் பணியாளர் எச்சரிக்கை

"சமசர பேச்சுவார்த்தை முயற்சி தோல்வி அடைந்ததால், விரைவில், வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்' என, "108' ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் எச்சரித்து உள்ளது.
ஊதிய உயர்வு, எட்டு மணி நேர வேலை, முறையான இடமாறுதல் கொள்கை, அடிப்படை வசதிகளுடன் கூடிய தங்குமிடம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அவசரகால, "108' ஆம்புலன்ஸ் சேவை பணியாளர், பல கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள, தொழிலாளர் துறை அலுவலகத்தில், சமரச பேச்சுவார்த்தைக்கு, நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், "108' ஆம்புலன்ஸ் சேவையை நிர்வகிக்கும், இ.எம்.ஆர்.ஐ., நிறுவன தரப்பில் யாரும் பங்கேற்காததால், பேச்சுவார்த்தை, அடுத்த மாதம், 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து, "108' ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க அமைப்பு செயலர் பால்கண்ணன் கூறுகையில், ""சமரச பேச்சு வார்த்தை முயற்சி தோல்வி அடைந்ததால், அடுத்த கட்டமாக, விரைவில், வேலை நிறுத்த போராட்டம் செய்ய திட்டமிட்டு உள்ளோம். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்,'' என்றார்.
நன்றி: தினமலர் 
http://www.dinamalar.com/district_detail.asp?id=744370

No comments:

Post a Comment