Sunday 10 July 2011

தினத்தந்தி செய்தி : 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்கவேண்டும் - தொழிற்சங்கங்கள் கோரிக்கை

மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பில் இணைத்துள்ள தமிழக தொழிலாளர் தலைவர்கள் 9 பேர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் , பைலட்கள் , இஎம்டி , மற்றும் கால் சென்டர் ஊழியர்கள் உள்பட பல்வேறு பணியிடங்களில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள், இந்த திட்டத்தை அரசே ஏற்று நடத்தி அதன் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். ஊதிய உயர்வு , பணியில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தக்க இழப்பீடு , சர்வீஸ் தொடர்ச்சியுடன் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

நன்றி : தினத்தந்தி நாள் : 10 .07 .2011  சென்னை பதிப்பு.
பக்கம் : 12

No comments:

Post a Comment