Wednesday 7 August 2013

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.
மத்திய, மாநில அரசுகளால் அமைக்கப்பட்ட தொழிலாளர் நலச் சட்டங்கள் எதுவும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்குப் பின்பற்றப்படுவதில்லை. எந்த சட்ட உரிமைகளும் வழங்கப்படவில்லை. இந்த உரிமைகளை வழங்க வேண்டும்.
பெண் ஊழியர்கள் குறை தீர்க்க குழு அமைக்க வேண்டும், பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும், குறைந்தபட்சக் கூலி சட்டத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும்.
சம உழைப்புக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், 24 மணி நேரமும் பணியாற்றும் ஊழியர்கள் விபத்தில் இறந்தாலோ, நிரந்தரமாக ஊனம் ஏற்பட்டாலோ இழப்பீடு இல்லை.
எனவே இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு கரூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத் தலைவர் சுந்தரவடிவேல் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலர் பால்கண்ணன், நிர்வாகிகள் சரவணன், முத்துக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.
இதில் பங்கேற்ற தொழிலாளர்கள் நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வாயில் கருப்புத் துணியைக் கட்டியிருந்தனர்.

No comments:

Post a Comment