(108AWU)Reg.No.1508/MDU,
Affiliated with: CENTRAL ORGANISATION OF INDIAN TRADE UNIONS- COITU
Wednesday, 28 August 2013
கோவை மண்டல அளவில் வேலைநிறுத்த ஆயத்த கூட்டம் நாமக்கல்லில்
கடந்த 27/08/2013 அன்று கோவை மண்டல அளவிலான வேலைநிறுத்த ஆயத்த கூட்டம் நாமக்கல்லில் கவின் கிஷோர் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு கோவை மண்டல செயலாளர் திரு சுரேஷ்குமார் தலைமை வகித்தார்,மாவட்ட தலைவர் திரு மகேஷ் வரவேற்ப்புரையும் மாநில நிர்வாக குழு உறுப்பினர் திரு சாமிவேல் சிறப்புரையும் ஆற்றினர்,மாவட்ட துணை தலைவர் திரு சத்தியமூர்த்தி நன்றியுரை ஆற்றினார். திருச்சி,கரூர்,சேலம்,திருப்பூர்,நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஓய்வில் உள்ள அனைத்து ஊழியர்களும் இதில் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மதுரையில் நடந்த வேலைநிறுத்த ஆயத்த கூட்டதில் நடந்த நிகழ்வுகள் ஊழியர்களிடம் பரிமாறப்பட்டன.வரும் 11/09/2013 அன்று சென்னையில் தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் கோவை மண்டலத்தில் வேலை நிறுத்தத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment