Friday 16 September 2011

ஆந்திராவில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம், ஊர்வலம், தர்ணா

ஜி.வி.கே.நிறுவனம் இந்திய முழுவதும் தனது லாபவேட்டைக்காக தொழிலாளர்களை கொடுமைப்படுத்தி சுரண்டி வந்தது. இந்திய முழுவதும் உள்ள தொழிலாளர்கள் இந்த கொடுமைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில மாநிலங்களில் ஜி.வி.கே. விரட்டி அடிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆந்திராவில் ஜி.வி.கே வின் கொடுஞ்சுரண்டலில் இருந்து விடுதலை பெறவும், இந்த திட்டத்தை அரசே ஏற்று நடத்த கோரியும் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதம், தர்ணா, ஊர்வலம்,வேலைநிறுத்தம் என்று பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு விதமான போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் வெல்ல வேண்டும் , அனைத்து மாநிலங்களிலும் அரசே இந்த திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் சங்கம் கேட்டு கொள்கிறது . 

No comments:

Post a Comment