Tuesday 6 September 2011

இவர்களெல்லாம் மனிதர்கள் தானா ? அதிகார மமதையில் ஆடும் ஜி.வி.கே.வின் எச்.ஆர். , டி.எம்.ஒ.இ, மற்றும் பிளிட்

இந்தியாவில் அரசின் அனைத்து நிறுவனங்களிலும் தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன. ரயில்வே , போக்குவரத்து , விமானம் என்று அனைத்து துறைகளிலும் சங்கங்களோடு அரசு முறைபடி பேச்சுவார்த்தை நடத்துகிறது. நியாயமான கோரிக்கைகளை ஏற்கின்றன.இவை அனைத்தும் சுமூகமாக நடைபெறுகிறது. ஆனால் ஜி.வி.கே.நிர்வாகம் என்னவோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போலவும் , இவர்களுக்கு தொழிற்சங்க சட்டங்கள் பொருந்தாதது போலவும் நடந்து கொள்கிறார்கள் .108  ஆம்புலன்ஸ் திட்டத்தில் பத்து பைசா கூட முதலீடு இல்லாமல் இடைத்தரகராக இருந்து கொண்டு ஆந்திர கம்பனி ஜி.வி.கே. லாபத்தை அள்ளி குவிக்கிறது. அரசிடமிருந்து அதிக அளவில் பணம் பெற்று கொண்டு தொழிலாளர்களுக்கு மிகக்குறைவான ஊதியத்தை அளித்து விட்டு , மக்களுக்கும்  நல்ல சேவை சென்று அடையாமல் தனது அதீத லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஜி.வி.கே.நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. 

இந்தியாவில் லட்சக்கணக்கான தனியார் நிறுவனங்கள் இருகின்றன. ஆனால் ஜி.வி.கே.போல  தொழிலாளர்களை கொடுமை செய்யும் நிறுவனம் எதுவுமே இல்லை எனலாம். அந்த அளவிற்கு அது இந்தியாவில் இயற்றப்பட்ட எந்த சட்டங்களையும் சட்டைசெய்யாமல் நடந்து கொள்கிறது. ஒ.இ., பிளிட் ,டி.எம்., மற்றும் எச்.ஆர். போன்றவர்கள் தொழிலாளர்களை கொடுமை செய்யவே நியமிக்கபட்டிருக்கிறார்கள் .ஆரம்பத்தில் ஒரு சில நல்ல ஒ.இ.மற்றும் டி.எம்.கள் வேலைக்கு சேர்ந்தார்கள் , ஆனால் நிர்வாகம் சொல்லியபடி தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்த அவர்கள் சம்மதிக்காததால்  வேலையை விட்டு நீக்கப்பட்டார்கள் . சில மனச்சாட்சியுள்ளவர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்று விட்டார்கள் . உண்மையிலையே அவர்கள் தான் நெஞ்சில் ஈரம் உள்ள மனிதர்கள். 

திருச்சி மாவட்ட டி.எம். மற்றும் ஒ.இ. இருவரும் திருச்சி மாவட்ட ஆம்புலன்ஸ் ஊழியரின் சம்பளத்தை அவருக்கு எந்த விதமான  முன்னறிவிப்பும்  கொடுக்காமல் பிடித்தம் செய்தார்கள் . இன்று வரை அவருக்கு சம்பளத்தை கொடுக்காமல் அவரை சென்னைக்கும் , திருச்சிக்கும் அலைய வைத்து கொண்டு உள்ளார்கள், அவருக்கு எந்த அறிவிப்பும் இல்லாமல்  டூட்டியும் போடாமல் மாத சம்பளத்தை மட்டுமே நம்பி வாழும் அவரை இன்று அவர் குழந்தைக்கு கூட பால் வாங்கித்தரமுடியாத அளவிற்கு நிர்வாகம்  தவிக்க வைத்துள்ளது. ஹிட்லர் கூட  இப்படி நடந்து கொண்டார என்று தெரியவில்லை அந்த அளவிற்கு திருச்சி  டி.எம்.மற்றும் ,எச்.ஆர்.க்கு பணவெறியும், பதவி வெறியும் தலைக்கு ஏறி தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கின்றனர். இவ்வளவு மோசாமானவர்களின் கைகளில்  மக்களுக்கு அவசர சேவை செய்யும் 108  ஆம்புலன்ஸ் திட்டம்  ஒப்படைக்கப்படுள்ளது அபாயகரமானதாகும். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இதில் தலையிட்டு ஆந்திராவில் இருந்து வந்து தமிழர்களை கொடுமைப்படுத்தும்  ஜி.வி.கே. நிர்வாகத்தை இந்த திட்டத்தில் இருந்து நீக்கி விட்டு , தமிழக அரசே இந்த திட்டத்தை ஏற்று நடத்தினால் தான் மக்களுக்கு உண்மையான முழுமையான இலவச ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும்.  தொழிலாளர்களுக்கும் இந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் .தாயுள்ளம் கொண்ட மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதை செய்வார் என்று  நம்பிக்கையுடன் தான் இவ்வளவு துன்பங்களையும் 108  ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வரை  தாங்கி  கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment