Saturday 3 September 2011

ஆந்திர அரசு, 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் இருந்து ஜி.வி.கே.வை விரட்ட தயாராகி வருகிறது.

ஜி.வி.கே. நிர்வாகம் தான் இந்திய அரசையே தலைமை தாங்கி நடத்துவது போல தனது ஊழியர்களை காட்டுமிரண்டிதனமாக மிரட்டி வேலை வாங்கி வந்தது.108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை  சகட்டு மேனிக்கு பணிநீக்கம் செய்தல் , ஊழல் செய்தல் , வாகனத்தை சரியாக பராமரிக்காமல் இருப்பது, போலி கணக்கு எழுதுவது, கால் சென்டரில் காலிபணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது, தொழிலாளர் சட்டங்களை மதிக்காமல் செயல்படுவது என்று இந்திய அரசின் அரசியலமைப்புக்கு விரோதமாக அனைத்தையும் செய்து வந்தது. அரசிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி ஏழைமக்களுக்கு உரிய சேவை சென்றைடையாமல் மக்கள் பணத்தை ஏப்பம் விட்டு வந்தது. 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களின் காரணமாக ஜி.வி.கேவின் முகத்திரை தமிழகத்தில் மட்டுமல்ல ஆந்திராவிலும் கிழிக்கப்பட்டு விட்டது. தற்போது ஆந்திர அரசு ஜி.வி.கே.வின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி நிதி ஒதுக்கிட்டை முடக்கியுள்ளது.

ஆந்திர முதல்வர் திரு. கிரண் குமார் ரெட்டி அவர்கள் தனது சுகாதார துறை ஆய்வு கூட்டத்தில் ஜி.வி.கே வை இந்த திட்டத்தில் இருந்து வெளியேற்றுவது சம்பந்தமாக முடிவு எடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் முறையான கணக்கை சமர்பிக்காதது, வாகனகளை சரியாக பராமரிக்காதது , ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் அளிக்கப்படாதது ஆகிய கடுமையான குற்றசாட்டுகளை ஆந்திர அரசு கூறியுள்ளது.

கொள்ளை லாபம் மட்டுமே தனது குறிக்கோளாக கொண்டு மக்கள் பணத்தை கொள்ளையடித்து வந்த ஜி.வி.கே.வின் அராஜகம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment