Friday 9 September 2011

ஊழியர்கள் உண்ணாவிரதம் 108 ஆம்புலன்ஸ் சேவை அரசே ஏற்று நடத்தணும் (திருச்சி) - தினமலர்

"108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும்' என 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திருச்சியில் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். தமிழக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த "108 ஆம்புலன்ஸ்' ஊழியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை அருகே நடந்த இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில், "108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் பெறும் விகிதத்தில் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிகப் பணிநீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும். தன்னிச்சையாக பழிவாங்கும் நோக்குடன் இடமாற்ற உத்தரவுகள் வழங்குவதையும் உள்நோக்குடன் குற்றச்சாட்டுகள் குறிப்பாணைகள் வழங்கும் போக்கினையும் கைவிட வேண்டும். 8 மணி நேரத்துக்கு அதிகமாக செய்யும் வேலைக்கு "ஓவர்டைம்' ஊதியம் வழங்க வேண்டும்' என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

No comments:

Post a Comment